யாரடி நீ மோகினி வில்லி சைத்ராவுக்கு திருமணம் எப்பொழுது தெரியுமா?

யாரடி நீ மோகினி வில்லி சைத்ராவுக்கு திருமணம் எப்பொழுது தெரியுமா?

Default Image

யாரடி நீ மோகினி வில்லி சைத்ரா தனது காதலரை இந்த மாதம் 11 ஆம் தேதி கரம்பிடிக்கவுள்ளார். 

பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடராகிய யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற நடிகை தான் சைத்ரா ரெட்டி. இவர் வில்லியாக இருந்தாலும் கதாநாயகியை விட அதிக ரசிகர் போடலாம் இவருக்கு தான் உண்டு. இவர் அதே சினிமாவின் தொழில் செய்யக்கூடிய ராகேஷ் என்பவர் காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இவர்கள் இருவருக்கும் வீட்டார் சம்மதத்துடன் திரையுலக நண்பர்களின் ஆசீர்வாதத்துடன் நிச்சயம் சிறப்பாக நடைபெற்றது.

இவர்களுக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விகள் எல்லாம் இருக்கிறது. அதிக நாட்கள் எல்லாம் இல்லை, இன்னும் 6 நாட்கள் தான் உள்ளது. ஆம், வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி சைத்ராவுக்கும் அவரது காதலன் ராகேஷுக்கும் திருமணம். இந்நிலையில் அதே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மற்ற நாடகங்களில் கதாநாயகியாக நடிக்க கூடிய ரேஷ்மா, ஷபானா மற்றும் நட்சத்திரா ஆகியோர் நால்வரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் சைத்ராவின் திருமணத்திற்காக இப்பொழுதே போட்டோஷூட்ஸ் எல்லாம் துவங்கிவிட்டார்கள் என்றால் பாருங்களேன்.

Join our channel google news Youtube