கமலின் “இந்தியன்-2” படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பை 2021-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்த போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் . அதனையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.இதனிடையே கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் இணைந்தார் .

லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.தற்போது இந்தியன்2 படத்தின் படப்பிடிப்பை 2021-ம் ஆண்டு ஜனவரி மாத கடைசியில் அல்லது பிப்ரவரியில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் ,ஒரு மாதத்தில் படத்தை முடித்து விட்டு தேர்தலுக்கான பிரச்சாரங்களிலும் , தேர்தல் பணிகளிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது