சுவையான சீரக ரைஸ் செய்வது எப்படி தெரியுமா?

சுவையான சீரக ரைஸ் செய்வது எப்படி தெரியுமா?

Default Image

சுவையான சீரக சாதம் செய்யும் முறை. 

இன்று நாம் நமது சமையல்களில் நமக்கு பிடித்தமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், நாம் சாதத்திலேயே, வகை வகையான உணவுகளை செய்து சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில் சுவையான சீரக ரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • சாதம் – ஒரு கப் 
  • சீரகம் – 4 டீஸ்பூன் 
  • பூண்டு – 15 பல் 
  • சோம்பு, உளுந்தம் பருப்பு, மிளகு தூள் – ஒரு டீஸ்பூன் 
  • பச்சை மிளாகாய் – ஒன்று 
  •  நெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வாய்த்துக் கொள்ள வேண்டும். பின், பூண்டை தோல் உரித்து, பொடியாக நறுக்க வேண்டும். பின் கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, நறுக்கியா பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 

பின் சோம்பு, சீரகம், நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள் அஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் சாதம், உப்பு சேர்த்து நன்கு கலந்து பரிமாற வேண்டும். இப்பொது சுவையான சீரக சாதம் தயார். 

Join our channel google news Youtube