தமிழகத்தில் விக்ரம் படம் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இந்த படம் வெளியான நாளிலிருந்து இப்போது வரை ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இரண்டு வாரம் ஆகியும் இன்னும் மக்கள் கூட்டம் பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள் என இரவு காட்சியிலும் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க சென்று கொண்டு தான் இருக்கிறார் கள்.

படம் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும்  225 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதைபோல் தமிழ்நாட்டில் மட்டும் 102 கோடி வசூல் செய்திருந்தது. இதுவரைக்கும் எந்த தமிழ்ப்படமும் முதல் வாரத்தில் இவ்வளவு வசூல் செய்ததில்லை, கேரளாவில் 30 கோடி வசூல் செய்து அங்கேயும் ஒரு சாதனை படைத்தது.

இதையும் படியுங்களேன்- தளபதி பிறந்த நாளுக்கு டபுள் ட்ரீட்.. ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….

இந்த நிலையில், விக்ரம் படம் வெளியான 13 நாட்களில் தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் தமிழகத்தில் மட்டும் 138 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் 300 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment