வதந்திகளை பரப்பி அவர்களை காயப்படுத்த வேண்டாம் – இயக்குனர் மோகன்

கடந்த சில  மாதங்களாக சீனாவை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வந்த நிலையில், தற்போது, இந்த நோயானது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த நோய் பரவி வருகிற நிலையில், நோய்  இருப்பதாக அறிகுறி உள்ளவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீட்டு  வாசல்களில் எச்சரிக்கை ஸ்டிக்கரும் ஒட்டப்படுகிறது. 

இதுகுறித்து திரௌபதி பட இயக்குனர் மோகன் அவர்கள் கூறுகையில், ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு எனும் ஸ்டிக்கர் ஒட்டிய வீடுகளில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். பொது நலனுக்காக தானாக வீட்டிற்குள் தனிமாய்ப்படுத்தி கொண்டவர்கள்.   அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. வதந்திகளை பரப்பி அவர்களை காயப்படுத்த வேண்டாம்.’ என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.