ஜனாதிபதி திறக்க வேண்டும் என்பதுதான் திமுக நிலைப்பாடு – அமைச்சர் சேகர் பாபு

ஜனாதிபதி திறக்க வேண்டும் என்பதுதான் திமுக நிலைப்பாடு – அமைச்சர் சேகர் பாபு

P. K. Sekar Babu

ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு என அமைச்சர் சேகர் பாபு பேட்டி.

டெல்லி, சென்ட்ரல் விஸ்டாவில் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றத்தை ஆளும் பாஜக அரசு கட்டி முடித்துள்ளது. இந்த புதிய நாடாளுமன்றமானது வரும் மே 28இல் திறக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த சமயத்தில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்.

ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பதாக அறிவித்தனர். மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுவை தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும், பதவியில் உள்ள ஜனாதிபதி திறப்பது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு எனவும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube