திமுக அலுவலகம் திறப்பு விழா – சோனியா காந்திக்கு அழைப்பு!

திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு.

டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு டிஆர் பாலு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். திமுக அலுவலகம் திறப்பு விழா தொடர்பாக டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து டிஆர் பாலு, ஆ.ராசா உள்ளிட்ட எம்பிக்கள் அழைப்பு விடுத்தனர்.

இதுபோன்று ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். ஒரு நாள் பயணமாக 2ம் தேதி காலை டெல்லி செல்லும் முதலமைச்சர் திறப்பு விழாவிற்கு பிறகு இரவு மீண்டும் தமிழகம் திரும்புவார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்