மத்திய இணையமைச்சர் முரளிதரனை சந்தித்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு..!

நேற்று முன்தினம், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் பறிமுதல் செய்துளளது. 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், இந்த மாதம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, டெல்லியில் மத்திய அமைச்சர் முரளிதரனை திமுக எம்.பி., டி.ஆர்.பாலு அவர்கள் நேரில் சந்தித்தார். அப்போது, இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்ததோடு, மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.மத்திய அமைச்சருடனான சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் கிடைத்ததாகவும், இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 64 மீனவர்கள், 10 படகுகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுபோன்று சிறைப்பிடிப்பு தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அரசை இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நாட்டின் அரசுடன் பேசி உரிய உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.