நீட் ஒழிப்பு நாடகமாக ஊரெல்லாம் கையெழுத்து வாங்கி வருகிறது திமுக – விஜயபாஸ்கர்

கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து  இருந்தார்.

நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் – குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி..!

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி அவர்கள், நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்து வெளியேறிய பின்னர் மாணவர்களின் உரிமைக்கு அதிமுக முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள்,  கையெழுத்தில் நிட்டை ஒழிப்போம் என உரக்க சொல்லி, ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. இன்றைக்கு ஊரெல்லாம் கையெழுத்தை வாங்குவோம் என்கின்ற நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளது ஏன் என்று அமைச்சர் உதயநிதி விளக்கம்  அளிக்க வேண்டும்.

யாரை எதிர்த்து இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என தெரிய விரும்புகிறேன். காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.