தமிழகத்தில் 16 ஆயிரத்தை தாண்டிய டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில், இதுவரை 16,395 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில், மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,152  ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 16,395 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் இதுவரை 10,572 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 9 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan