படம் பிடிக்கலையா என்ன செருப்பால அடிங்க – விக்னேஷ் கார்த்திக் ஸ்பீச்!

Vignesh Karthick : ஹாட்ஸ்பாட் படம் பிடிக்கவில்லை என்றால் தன்னை செருப்பால் அடிங்க என படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி ஹிட் ஆகி கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஹாட்ஸ்பாட் படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமே படத்தின் இயக்குனரான விக்னேஷ் கார்த்திக் உறுதியாக ஒரு விஷயம் ஒன்றை கூறியது படத்தின் கதை மீது இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.

அவர் பேசியதன் மூலம் கண்டிப்பாக படத்தின் கதையில் எதோ ஒன்று இருக்கிறது என தெரிகிறது. இந்த ஹாட் ஸ்பாட் படம் கடந்த மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஹாட்ஸ்பாட் படம் பிடிக்கவில்லை என்றால் தன்னை செருப்பால் கூட அடிக்கலாம் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ” நான் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் இந்த படத்தை பார்க்க வரவில்லை.

மலையாள படத்திற்கு எல்லாம் தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால், நான் எடுத்து இருக்கும் இந்த படமும் நல்ல படம் தான் இதற்கு எதற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. படத்திற்கு வருவதற்கு சற்று குழப்பமாகவும் யோசனையாகவும் இருந்தது என்றால் பிரச்சனையில்லை நான் இப்போது சொல்கிறேன் படம் பாருங்க பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் கூட அடிங்க.

நான் இதனை வார்த்தைக்காக எல்லாம் சொல்லவே இல்லை உண்மையாகவே சொல்கிறேன் படத்தை பாருங்கள் அப்படி பிடிக்கவில்லையா என்னை செருப்பால் கூட அடிங்க. படத்திற்கு வந்த பிறகு இந்த படத்திற்கு எதற்காக வந்தோம் படம் நல்ல இல்லை என்று உங்களுக்கு நிச்சியமாகவே எண்ணம் வராது” எனவும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ‘ இதை விட ஒரு இயக்குனர் தன் படைப்பு மீது நம்பிக்கை வைக்க முடியாது’ என்பது போல கூறிவருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.