லியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குனர் லோகேஷூக்கு காயம்!

லியோ திரைப்படத்தை கேரளாவில் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், கேரளா ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றபோது, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சிறு காயம் ஏற்பட்டது.

‘லியோ’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அரோமா தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

பின்னர், தியேட்டர் மேலிருந்தபடியே ரசிகர்களை பார்த்து கையசைத்து, செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது, பாலக்காடு தியேட்டருக்கு சென்ற இயக்குநர் லோகேஷை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்டத்தில் சிக்கிய அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொச்சியில் நடக்க இருந்த ரசிகர்கள் சந்திப்பு, செய்தியாளர் சந்திப்பு தற்காலிகமாக ரத்தாகியுள்ளது.

இது குறித்து இயக்குனர் லோகஷே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். விரைவில் உங்கள் அனைவரையும் கேரளாவில் சந்திக்க நிச்சயமாக வருவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

‘தளபதி 68’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டாளத்தின் மொத்த லிஸ்ட்!

விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 19ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, 5 நாட்களிலேயே உலக முழுவதும் ரூ.450 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது.

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் 500 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை போலவே, கேரளாவிழும் அமோக வரவேற்பு பெற்று இப்படம் 5 நாட்களில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

5 நாட்களில் லியோ படம் செய்துள்ள வசூல்.! சாதனையா? சோதனையா?

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.