கமலிசம் பழகு! கார்த்திக் சுப்புராஜை கடுப்பேற்றும் பிக் பாஸ் பிரபலம்!

கமலிசம் பழகு! கார்த்திக் சுப்புராஜை கடுப்பேற்றும் பிக் பாஸ் பிரபலம்!

karthik subbaraj Kamal Haasan

இயக்குனர் காத்திக் சுப்புராஜ் சினிமாவில் படங்களை இயக்க வருவதற்கு முன்பிலிருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று அனைவர்க்கும் தெரியும். அதைப்போல அவர் தான் ஒரு பெரிய ரஜினி ரசிகர் என்பதை பேட்டியில் கூறியதை வைத்தும் நாம் பார்த்திருப்போம். இதெயெல்லாம் மிஞ்சும் அளவிற்கு ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தை அவர் இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் சிறிய வயதில் இருந்து ஒருவரை எவ்வளவு ரசித்திருந்தால் பேட்ட படம் மாதிரி படம் எடுத்திருப்பார் என அனைவரும் வியந்து பார்த்தார்கள் என்றே சொல்லவேண்டும். இப்படி ரஜினியின் தீவிரமான ரசிகராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜை பிக் பாஸ் மூலம் பிரபலமான அபிஷேக் கமல்ஹாசனை வைத்து சற்று கடுப்பேற்றியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படம் பற்றி பேசுவதற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த பேட்டியை பிக் பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா தான் தொகுத்து வழங்கினார்.

இனிமேல் நடிக்க மாட்டேன்! ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி?

அப்போது அபிஷேக் பேட்ட திரைப்படத்தின் காட்சி ஒன்றை பற்றி கேள்வி கேட்டார். அதற்க்கு கார்த்திக் சுப்புராஜ் ” என்னை பேட்டி எடுக்கும்போது எதற்காக இந்த மாதிரி டிசர்ட் போட்டு கொண்டு இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு காரணம் அபிஷேக்  ‘கமலிசம் பழகு’ என்ற வசனம் இடம்பெற்று இருந்த டிசர்ட்டை அணிந்திருந்தார். கார்த்திக் சுப்புராஜ் இப்படி கேட்டவுடன் அபிஷேக் நான் கமல் சாரின் வெறியன் கமலிசம் பழகு என்று போட்டுகொண்டு இருக்கிறேன் என்பது போல தெரிவித்தார்.

பிறகு உங்களுடைய வீட்டில் கமல் சாருடைய பாடல்கள் வந்தாலே ஒரு மாதிரி பாப்பீங்க என்பது போல கார்த்திக் சுப்புராஜை பார்த்து அபிஷேக் கூறினார். இதனால் சற்று கடுப்பான  கார்த்திக் சுப்புராஜ் அப்படியெல்லாம் இல்லை எனக்கு கமல் சாரையும் பிடிக்கும். அவருடைய படங்களை பார்த்து அவரையும் நாங்கள் ரசித்து இருக்கிறோம்” என கூறினார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube