டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்த டிஜிட்டல் போர்டு!

டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்த டிஜிட்டல் போர்டு!

digital board

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்தது டிஜிட்டல் போர்டு. மதுகுடிப்போர் மதுபானங்களின் விலைகளை அறிந்துகொள்ள ஏதுவாக டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. மது பிரியர்கள், எந்தெந்த மதுபானங்கள் எவ்வளவு விலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது என்பது குறித்து டிஜிட்டல் போர்டு மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழகத்தில் மாவட்டத்துக்கு 5 கடைகள் வீதம் முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளை நவீனப்படுத்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் முத்துசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனையானது மேற்கொள்ளப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube