நான் தீவிர விஜய் ரசிகன்! விக்ரம் மகன் துருவ் ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் விக்ரம். இவரது மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிக்கும் முதல் படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படம் பிப்ரவரியில் வெளிவர உள்ளது.

இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது , தான் ஒரு விஜய் ரசிகன் எனவும், சென்ற வருடம் வெளியான படங்களில் வடசென்னை எனக்கு மிகவும் பிடித்த படம் எனவும்,தனுஷின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். அவர் நடித்த மாரி 2 படத்தையும் பார்த்து விட்டேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் வருகிற பொங்கலுக்கு தான் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment