நாளை வெளியாகுமா துருவ நட்சத்திரம்? கடைசி நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

விக்ரம், கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை கடைசி நேரத்தில் நாளை வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் “துருவநட்சத்திரம்”. இந்த திரைப்படம் நிதிப் பிரச்சனையால் பலமுறை திரைக்கு வரவில்லை. இதன் பின்,  இந்த ஆண்டு தொடக்கத்தில் விக்ரம் டப்பிங் பணிகளை தொடங்கினார்.

இருப்பினும் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டு இருந்தது.  பிறகு இறுதியாக படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இருந்தாலும், படத்தை நாளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காரணம், சிம்பு நடிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு ரூ.2.40 கோடியை பெற்ற கெளதம் மேனன், படத்தை முடிக்காமல் பணத்தையும் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.

‘ஏகே 63’ திரைப்படத்தை தயாரிக்க களமிறங்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.!

இதனால், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடைக்கோரி பணம் கொடுத்த ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், வாங்கிய பணத்தை நாளை காலை 10.30 மணிக்குள் கௌதம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதற்கிடையில், இத்திரைப்படம் தொடர்பாக ரூ.80 கோடி வரை கடன் இருப்பதாகவும், அது தொடர்பான வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இன்னும் திரையரங்குகளை இறுதி செய்ய முடியாமல் படக்குழு திணறி வருவதாக கூறப்படுகிறது.

துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்த ரோலக்ஸ்! காரணத்தை கேட்டு ஷாக்கான விக்ரம்!

துருவ நட்சத்திரம்

ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் சீக்ரெட் ஏஜென்டாக சியான் விக்ரம் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ராதிகா சரத்குமார், விநாயகன், சலீம் பேக், வம்சி கிருஷ்ணா மற்றும் மாயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.