நவராத்திரியின் முதல் மூன்று நாள் வழிபாடு ஏன் நாம் துர்க்கைக்கு செய்ய வேண்டும் ?
நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் புதிய ராத்திரி என்றும் அழைப்பார்கள். அந்த ஒன்பது தினங்களிலும் லஷ்மி பூஜை செய்து நாம் வழிபட்டு வருகிறோம். கல்வி,செல்வம் ,வீரம் என்று தானே கூறுவார்கள். அப்பிடியிருக்க கலை மகளுக்கு முதலில் பூஜை செய்யாமல் அலைமகளுக்கு பூஜை செய்வது ஏன் ? என்றும் பலர் மனதில் கேள்விகள் எழக்கூடும்.
ஆனால் சிருஷ்டி வரிசை படி பார்த்தால் முதலில் சரஸ்வதி ,லட்ஷமி ,துர்க்கை என்று தான் வரும்.ஆனால் நவராத்திரி முறைப்படி துர்க்கை ,லஷ்மி ,சரஸ்வதி என்று தான் வரும் என்று கூறுகிறார்கள்.
துர்க்கையே முதல் மகளாக இருப்பதால் நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட்டால் நம் துயர்களை நீக்கி நம்முடைய வாழ்க்கையை மேன்மையடைய செய்வாள். எனவே தான் முதல் மூன்று நாட்கள் நாம் துர்க்கை வழிபாடு செய்கிறோம்.