முதற்கண் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர் தான். நாம் முதன் முதலில் எழுதத் துவங்கும் போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் துவங்குவோம் . அதுபோல் விநாயகர் வழிபாட்டில் தலையில் கொட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் வழிபாடு செய்வோம் அது எதற்காக என்றும் அதன் பலன்கள் என்ன வேண்டும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தோப்புக்கரணம் போடுவதன் காரணம் :
அகத்திய முனிவர் சிவனிடமிருந்து காவிரி நதியை தன் கமண்டலத்தில்[நீர் பாத்திரம் ] வைத்து தென் திசையில் உள்ள குடகு மலையில் சிவ பூஜை செய்து கொண்டிருக்கிறார், அதேசமயம் இந்திரன் சீர்காழி பூஜை செய்து கொண்டிருக்கிறார். மழை இல்லாததால் நந்தவனம் வாடி காணப்படுகிறது. நாரதர் இந்திரனிடம் அகத்தியரிடம் உள்ள காவிரி நீர் பெருக்கெடுத்தால் தான் இந்த நந்தவனம் பொலிவடையும் எனக் கூறுகிறார். இந்திரனும் விநாயகரிடம் தன் வழிபாட்டை வைக்கிறார்.
விநாயகரோ ,காக்கை வடிவம் எடுத்து அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள நீரில் அமருகிறார்.அகத்தியர் அதை துரத்த முயன்ற போது கமண்டலத்தில் உள்ள நீர் கவிழ்ந்து பெருக்கெடுத்து விடுகிறது .ஆத்திரமடைந்த அகத்தியர் காக்கையை தண்டிக்க முயற்சி செய்கிறார். அப்போது அந்த காக்கை சிறுவனாக மாறுகிறது பிறகு விநாயகராக காட்சியளிக்கிறார் . இதனை பார்த்த அகத்தியர் தவறு செய்து விட்டோம் என்று விநாயகர் முன் தலையில் கொட்டிக் கொண்டும் தோப்புக்கரணம் போடுகிறார் .
விநாயகரோ அகத்தியரின் இரு கரங்களையும் பிடித்து இன்று முதல் என் முன் கொட்டிக் கொண்டும் தோப்புக்கரணம் போட்டு வழிபாடு செய்தால் கூறிய மதியும், சீரிய நிதியும் பெறுவார் என அருளுகிறார், இதனால்தான் நம் விநாயகரை பார்த்தவுடன் கைகள் தன்னிச்சையாகவே தலையில் கொட்டிக் கொள்கிறோம்.
இதன் அறிவியல் காரணம்
தோப்புக்கரணம் போடுவதும் தலையில் கொட்டிக் கொள்வதும் அறிவியல் ரீதியாக நம் உடலுக்கு நன்மை அளிக்கிறது. தலையில் கொட்டிக் கொள்ளும் போது அந்தக் கொட்டிக் கொள்ளும் இடத்தில் நினைவலைகளை தூண்டக்கூடிய முடிச்சு உள்ளது. இதனால்தான் எழுதும் போது ஏதேனும் மறந்து விட்டால் தலையில் கொட்டினால் நினைவுக்கு வருகிறது .
மேலும் தோப்புக்கரணம் போடுவதால் நம்முடைய அகங்காரம் குறையும், தான் என்ற ஆணவம் குறையும் என்று கூறப்படுகிறது . மேலும் இது மூளைக்கான சிறந்த யோகா பயிற்சியாகும் .அது மட்டுமல்லாமல் நம் கால்களில் உள்ள சோலியஸ் தசை பகுதி நல்ல ஆற்றலை உடல் முழுவதும் பரவச் செய்து ரத்த ஓட்டத்தை நன்கு பாயச் செய்கிறது இதனால் உடல் சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்கும்.
எனவே நாம் செய்யும் ஒவ்வொரு ஆன்மீக செயல்களிலும் ஒரு அறிவியலும் இருக்கத்தான் செய்கிறது. படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் தோப்புக்கரணம் போட சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த பயிற்சி மிகுந்த பலனை தரும்.
எனவே இந்த ஆன்மீக பயிற்சியை செய்து விநாயகரின் அருளையும் பெற்று உடல் நலத்தையும் பாதுகாப்போம்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…