ரம்ஜான் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?
Ramjan-ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ரம்ஜானின் சிறப்புகள் :
ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜானை ரமலான் என்றும் கூறலாம். அந்நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்வார்கள். ஒரு மாதங்கள் நோன்பு இருந்து 30 வது நாள் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
புவியியல் அமைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றுவதற்கு ஏற்ப ரம்ஜான் கொண்டாடப்படுகிறது .சவுதி அரேபியா, பக்ரைன், கத்தார் போன்ற ஐக்கிய நாடுகளில் ரம்ஜான் கொண்டாடிய பிறகு தான் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
ரமலான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படுகின்றன என நபிகள் கூறுகிறார். ரமலான் என்பது இஸ்லாமிய நாள்காட்டில் ஒன்பதாவது மாதம் ஆகும். இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி முதன் முதலில் முகமது நபிக்கு குரானை வெளிப்படுத்திய மாதமாகவும் அதை நினைவு கூறும் விதமாகவும் ரம்ஜான் அனுசரிக்கப்படுகிறது.
ரம்ஜான் நோன்பு :
இந்த ரமலான் நோன்பை மேற்கொள்ளும் போது இஸ்லாமியப் பெருமக்கள் எந்த ஒரு தீய பழக்க வழக்கங்களிலும் ஈடுபடக்கூடாது. முதியவர்கள், குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள், நோய் வாய் பட்டவர்கள் தவிர மற்ற அனைவருமே இந்த நோன்பை கடைபிடிப்பார்கள்.
இந்த ரமலான் மாதத்தில் பயிற்சி பெற்றவர்கள் அடுத்து வரும் 11 மாதங்களும் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். ரமலான் நோன்பை கடைபிடிக்க முடியவில்லை என்றால் அதற்குப் பதிலாக ஒரு ஏழைக்காவது உணவளிக்க வேண்டும் என திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.
ரம்ஜானின் முக்கிய நோக்கம் :
ஒருவருக்கு உணவு தானம் செய்ய வேண்டும் என்றால் முதலில் தானம் கொடுப்பவர்களுக்கு பசியின் அருமை தெரிந்திருக்க வேண்டும், பசியின் அருமை புரியவும் நோன்பு ஒரே காரணமாய் இருக்கிறது.இந்நாளின் முக்கிய நோக்கம் தர்மம் செய்வதும், இல்லாதவர்களுக்கு உதவி செய்வதுமே ஆகும்.
இஸ்லாம் என்பது வெறும் மார்க்கம் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை அதுவே அவர்களின் உறுதியான நம்பிக்கை. மனித வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு உண்டு .
நம்முடைய நன்மைகள், தீமைகள் இறப்பிற்குப் பின்னும் நம்மை வந்து சேரும் ,அதனால் அல்லாவின் கட்டளைப்படி வாழ்க்கையை வாழ்ந்தோமேயானால் நம் துயரங்கள் குறைக்கப்படும் .