அரைஞாண் கயிறு ஆண்கள் ஏன் அவசியம் அணிய வேண்டும்? அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?

hip chain

Devotion-ஆண்கள் ஏன் கட்டாயம் அரைஞாண்  கயிறு அணிய வேண்டும் என்றும் பெண்கள் எப்போது வரை அணியலாம் என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

அருணா கயிறு எப்போது அணியவேண்டும் ?

அரைஞாண் கயிறை அருணா கொடி ,அருணா கயிறு என்றும் கூறுவார்கள் .பொதுவாகவே ஒரு ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ பிறந்து சில  நாட்களில் அருணா கொடி அணிய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளி அருணா கொடி அணிவது பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதனால்தான் இன்றும் குழந்தை பிறந்த பிறகு அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து சீதனமாக குழந்தைக்கு அருணா கொடி வழங்குவது வழக்கமாகவும் சடங்காகவும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் ஆண் பிள்ளைகளாக இருந்தால் அவர்கள் உயிர் இருக்கும் வரை அணிய வேண்டும் என்றும் பெண் பிள்ளைகள் பூப்படையும் காலம் வரை தான் அணிய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.அருணா கொடியை கருப்பு கயிறு ,சிகப்பு கயிறு,வெள்ளி கொடி ,தங்கம் என அவரவர் வசதிக்கு ஏற்ப அணியலாம் .

அருணா கொடி அணிவதன் அறிவியல் காரணங்கள் ;

ஒரு நோய் வந்த பிறகு மருத்துவத்தை நாடி செல்வதை காட்டிலும் அது வருவதற்கு முன் சில செயல்களை பின்பற்றினால் வருவது தடுக்கப்படுகிறது. ஆதி காலத்தில் இருந்தே அருணா கொடி அணியும் பழக்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் ஆண்கள் கோவணம் கட்ட பயன்படுத்தினார்கள். நம் உள்ளாடைகளைத் தாண்டி உறுப்புகளை பாதுகாக்க அருணா கொடி அவசியமானது.

ஏனென்றால் ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்களும் விதைப்பையில் இருந்து வரக்கூடிய ரத்தக் குழாய்களும் ஒன்று சேரும் இடம் அடிவயிற்று பகுதி தான். அதைச் சுற்றி அருணா கொடி கட்டும்போது குடல் இறக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் வயிற்றில் உள் உறுப்புக்கள் மேலேறாமல் இருப்பதற்கும் பயன்படுகிறது.

குறிப்பாக வெள்ளி அருணா கொடி கட்டும்போது அதில் உள்ள வெள்ளியம் சத்து நம் உடலுக்கு அவசியமானது.உடல் சூடு தணிக்கப்படுகிறது.  நம் மூச்சு காற்றானது  மூக்கில் மட்டுமல்ல ,நம் தோல்  முழுவதும் உள்ள துளைகள் வழியாக காற்றை ஈர்க்கிறது. ஐம்பூதங்களில் வயிற்றுப் பகுதி வெப்பத்தை குறிக்கிறது.

ஒரு நபர் இறந்துவிட்டால் அவர் சுடுகாடு சென்ற பிறகுதான் அருணாக்கயிறு அவிழ்க்கப்படுகிறது. இது நம்மில்  பலருக்கும் தெரிந்ததுதான். இறந்தவர்கள் தொப்புளில் இருந்து 16 நாட்கள் வரை காற்று வெளியேறும். அதில் மூன்றாம் நாள் ஒருவகையான காற்றும் 16ஆம் நாள் ஒரு வகையான காற்றும் வெளியேறுகிறது. இதனால் தான் நம் முன்னோர்கள் மூன்றாம் நாள் குழியில் பால் ஊற்றும் நிகழ்வையும் ,பதினாறாம் நாள் சடங்கையும் வைத்துள்ளார்கள்.

ஆண்கள் மட்டும் ஏன் இறக்கும்  வரை அருணாக்கயிறு அணிய வேண்டும் என்றால் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான்90 சதவிகிதம் குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் ஆண்கள்  அருணாக்கயிறு அணியாவிட்டால் அண்டவாதம், விரைவாதம் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே அருணா கொடியானது நம் வாழ்வியலோடு தொடர்புடையது தான்.

பெருகிவரும் நவ நாகரிக உலகில் அருணா கொடி கட்டுவதை  பலரும் மறந்து விட்டார்கள். இதனால் நம்முடைய பாரம்பரியமும் கலாச்சாரமும் நாளடைவில் அழிந்து கொண்டே வருகிறது. மூடநம்பிக்கைகள் எனக் கூறப்படும் நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களிலும் ஒரு அறிவியல் காரணம் உள்ளது என்பதை மறுக்க முடியாத ஒன்று.

அதனால் இவற்றையெல்லாம் நாம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவில்லை என்றால் நம்மோடு மறைந்துவிடும். மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம்முடைய மரபுகளுக்கும் கொடுத்து மறக்காமல் கடைபிடிப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்