துளசி மாலை, ஸ்படிக மாலை எது சிறந்தது?.

துளசி மாலை மற்றும் ஸ்படிக மாலையை பயன்படுத்தும் முறை அதன் நன்மைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .

Tulasi malai (1)

துளசி மாலை மற்றும் ஸ்படிக மாலையை பயன்படுத்தும் முறை அதன் நன்மைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .

சென்னை :நம்முடைய வழிபாடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் தெய்வீக ஆற்றல் அதிகம் உள்ளது . குறிப்பாக அணியும் மாலை வகைகள் அதீத ஆற்றல் உள்ளதாக நம்ப படுகிறது .அதனால் தான் விரதம் மேற்கொள்ளும் போது மாலை பயன்படுத்தப்படுகிறது . அந்த வகையில் துளசி  மாலை மற்றும் ஸ்படிக மாலை மிக உயர்ந்ததாக கூறப்படுவதோடு  மட்டுமல்லாமல் பஞ்சபூத மாலைகளில் மிகவும் முக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது .

  • சிவப்பு சந்தன மாலை
  • ருத்ராட்ச மாலை
  • துளசி மாலை
  • ஸ்படிக மாலை
  • தாமரை மணிமாலை என ஐந்து மாலைகள் உள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியது.

துளசி மாலை;

துளசிச் செடியின் அடி கனமான தண்டிலிருந்து எடுக்கப்பட்டு அதை பயன்படுத்தி செய்ய படுவது துளசி மாலையாகும் .இந்த மாலை வாழ்வில் வெற்றியை பெற்று தரும் .உடலை குளிர்ந்த சமநிலையில் வைக்கும் .ஐயப்பனுக்கு மாலை அணியும்போது ருத்ராட்ச மாலையுடன் துளசி மாலையும் சேர்த்து அணிய வேண்டும். நம் உடலில் குளிர்ச்சியும் சூடும் சம நிலையில் இருக்க வேண்டும். அது எப்படி என்றால் ருத்ராட்சம் சூடான பொருள். துளசி குளிர்ச்சியான பொருள். இரண்டையும் சேர்த்து அணியும் போது உடல் சமநிலையோடு இருக்கும்.

தனியாக பயன்படுத்தும் போது நம் உடலின் தன்மை சில நேரங்களில் மாறுபடும். அதாவது நம் உடல் சூடானது என்றால் அந்த உடல் சூட்டை விட அதிகமான சூடான பொருளை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது உடலில் உள்ள சூடு வெளியேற்றப்படுகிறது. உதாரணமாக உடல் சூடானால் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதுண்டு .நல்லெண்ணெய் பலரும் குளிர்ச்சி என நினைப்பார்கள்.அப்படியில்லை  நல்லெண்ணையானது எள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிறது .எள்ளானது  சூடான பொருளாகும். அதனால் தான் உடல் சூடானால் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கின்றோம் .

துளசி மாலையை பயன்படுத்தும் முறை;

துளசி மாலையை வாங்கி வந்ததும் மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து பிறகு சுத்தமான தண்ணீரால் கழுவி பெருமாள் அல்லது மகாலட்சுமி திருவுருவப்படத்தில் வைத்து  பிறகு  அணிந்து கொள்ள வேண்டும். மேலும் துளசி மாலையை கொண்டு ஜெபம் செய்யும் போது நீங்கள் எண்ணும்  எண்ணிக்கை மற்றவர்களுக்கு தெரிய கூடாது கையில். ஏதேனும் துணி வைத்து மறைத்து செய்ய வேண்டும் இதுவே நியதியாகும்.துளசி மாலையை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடும் நாட்களில் மட்டும் அதனை பூஜை அறையில் வைத்து பிறகு பயன்படுத்திக் கொள்ளவும்.

ஸ்படிக மாலை;

இந்த ஸ்படிகம் என்பது இயற்கையாக விளையக்கூடிய  பாறையில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.  ஸ்படிக மாலை மிகவும் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. சுத்தமான ஸ்படிக மாலையை தண்ணீரில் போட்டால் அதன் உருவம் தெரியாது. ஸ்படிக மாலை உடலை குளிர்ச்சி படுத்தக் கூடியது.

சூடான உடல் உள்ளவர்கள் இந்த ஸ்படிக மாலையை அணிவது சிறந்தது. ஸ்படிக மாலை ஒரு மணி நேரத்தில் 21 ஆயிரத்து 600 நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது என கூறப்படுகிறது. மேலும் இது நம் மூச்சுக்காற்றுடன் தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஸ்படிக மாலை அணியும்போது சிறுநீரக பிரச்சனை குறைவதாகவும் கூறப்படுகிறது.

ஸ்படிக மாலையை பயன்படுத்தும் முறை;

ஸ்படிக மாலையை வாங்கி வந்த பிறகு பசுஞ்சாணத்தில் மூழ்கும் வரை வைக்க வேண்டும் . மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் கழித்து அதை பாலில் போட்டு மீண்டும் மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து பிறகு சுத்தமான தண்ணீர் கழுவி சுவாமி திருவுருவப்படத்தின்  பாதத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்படிக மாலை தொடர்ந்து அணியும் போது டென்ஷன் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மாலை அணிந்த பிறகு உடலில் தொந்தரவான   மாற்றம் ஏற்பட்டால் இந்த மாலையை அணிவதை தவிர்க்க வேண்டும்.  குறிப்பாக ஸ்படிக மாலை அணியும்போது ஒரு சிலருக்கு காய்ச்சல், சளி தொந்தரவை ஏற்படுத்தும் அவ்வாறு உள்ளவர்கள்   மட்டும் இந்த மாலையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மேலும் ஸ்படிக மாலை அணிந்தால் அதனுடன் ருத்ராட்சம், துளசி மாலை  போன்றவற்றை அணியக்கூடாது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்