தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Thai ammavasai (1) (1)

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை :அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க  உகந்த நாளாக கூறப்படுகிறது . நம்முடன் வாழ்ந்து மறைந்த  நம் முன்னோர்களுக்கு இந்த நாட்களில் தர்ப்பணம் ,சிராத்தம், திதி கொடுப்பது சிறப்பு என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசை மிகவும் சிறப்பான நாள்  ஆகும் .ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ,தை அமாவாசை இந்த அமாவாசை நாட்களில் ஆவது கட்டாயம் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தோமேயானால் குடும்பத்தில் சகல ஐஸ்வர்யமும் , முன்னோர்களின் ஆசியும்  கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

தை அமாவாசை 2025;

தை அமாவாசை 2025 இல் ஜனவரி 29ஆம் தேதி[ தை மாதம் 16ஆம் தேதி] புதன்கிழமை வருகின்றது. தை அமாவாசை திதியானது ஜனவரி 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7:36க்கு துவங்கி, ஜனவரி 29 மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. தை அமாவாசையானது உத்திராயண காலத்தில் வரும் சிறப்பான அமாவாசை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கிறார் .சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கும் காலமாகும். இதனால் சூரியனை பிதுர்காரகன்  என்றும் சந்திரனை மாதுர்காரகன் என்றும் கூறுகின்றனர். பொதுவாக சூரியனும் சந்திரனும் இணையும் காலத்தை தான் அமாவாசை என்கிறோம், இப்படி சூரியனும் சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பது தை அமாவாசையின் கூடுதல் சிறப்பாக சொல்லப்படுகின்றது. இதனை புண்ணிய காலம் என்றும் கூறுகின்றனர்.

நம் முன்னோர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் பல அசுப பலன்களை கொடுப்பதாக கூறப்படுகிறது . அதனால்தான் நம் முன்னோர்களின் திதி அன்று  சிராத்தம், தர்ப்பணம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது , இதை நாம் சரியாக கடைபிடிக்காவிட்டால் திருமண தடை ,தொழில் தடை ,வேலையின்மை ,குழந்தை இன்மை ,நீங்கா  வறுமை, அகால மரணம் ,தீராத நோய் போன்ற அசுப பலன்களை ஏற்படுத்துகிறது. மாதம் மாதம் செய்ய முடியாதவர்கள் இந்த மூன்று  அமாவாசை தினங்களிலாவது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாகப் செய்து  அவர்களின் பரிபூரண ஆசியை பெறுங்கள் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்