சித்திரை திருவிழா- உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா வருடம் தோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ,அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.
இவ்விழாவைக் காண வருடம் தோறும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் வருவார்கள். ஏப்ரல் 12ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை இரவு என்று இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவார்கள்.
ஏப்ரல் 19 மீனாட்சி பட்டாபிஷேகமும், ஏப்ரல் 20 திக்விஜயமும் நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நாளில் பெண்கள் தாலி கயிறு மாற்றிகொள்ளவது வழக்கம் .
ஏப்ரல் 22 இல் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 23 இல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற இருக்கிறது.இப்படி 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் குறிப்பாக மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…