மதுரை சித்திரை திருவிழா 2024-ல் எப்போது ?

chithra festival

சித்திரை திருவிழா- உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின்  முழு விவரத்தை இப்பதிவில் காண்போம்.

சித்திரை திருவிழா முழுவிபரம் :

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா வருடம் தோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ,அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.

இவ்விழாவைக் காண வருடம் தோறும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து  ஏராளமானோர் வருவார்கள். ஏப்ரல் 12ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை இரவு என்று இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்  வருவார்கள்.

ஏப்ரல் 19 மீனாட்சி பட்டாபிஷேகமும், ஏப்ரல் 20 திக்விஜயமும் நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் ஏப்ரல்  21ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நாளில் பெண்கள் தாலி கயிறு மாற்றிகொள்ளவது வழக்கம் .

ஏப்ரல் 22 இல் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 23 இல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் நடைபெற இருக்கிறது.இப்படி  15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் குறிப்பாக  மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்