வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

murugar

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம்.

வைகாசி விசாகம் என்றால் என்ன ?

வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் விசாக நட்சத்திரமும் இணையும் நாள் வைகாசி விசாகம் என கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் தான் முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றி கண்ணில் இருந்து அவதரித்த நாளாகும். மேலும் எமதர்மன் அவதரித்த நாளும் இன்று தான் எனவும் கூறப்படுகிறது.

விசாக நட்சத்திரத்தால் வைகாசி மாதத்திற்கே  சிறப்பாகும். விசாக நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டு எனவும்  சாஸ்திரங்கள் கூறுகிறது .

வைகாசி விசாகம் வழிபாடு :

இன்றைய தினம் முருகப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த தினமாக இருப்பதாலும் நெருப்பிலிருந்து முருகன் அவதரித்ததால் முருகனை குளிர்விக்க பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.

இந்நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் விரதம் இருந்து வழிபட்டால்  நினைத்த காரியம் கைகூடும் , பகை விலகும்.

பொதுவாக குழந்தை பேறு  கிடைக்க  கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வார்கள் ஆனால் முருகன் அவதரித்த இத்தினத்தில் விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொண்டால் முருகப்பெருமானே  மகனாக பிறப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

வைகாசி விசாகம் 2024,தேதி :

இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகம் மே மாதம் 22ஆம் தேதி காலை 8:18 க்கு துவங்கி மே மாதம் 23ஆம் தேதி 9:43 வரை உள்ளது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்து கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்றவற்றை படிப்பது மிகச் சிறப்பாகும்.

படிக்க இயலாதவர்கள் முருகனுக்கு உரிய மூல மந்திரமான ஓம் சரவணபவ என்று இந்த ஒரு மந்திரத்தை மட்டுமே கூறினாலே முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைத்து விடும்.

எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் கந்த பெருமானை வழிபாடு செய்தாலே அதிலிருந்து விலகி கர்ஜனையோடு வலம் வரும் பாக்கியத்தை கந்த பெருமான் தருவார் என்று ஆன்மீக வரலாறு கூறுகிறது. ஆகவே இந்த வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை மனம் உருகி வழிபாடு செய்து இந்த நாளுக்குரிய அனுகூலத்தை பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்