குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக வழிபாடு என்பது சிறப்பாக கருதப்படுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்ற வாக்கு உள்ளது. அந்த அளவுக்கு குரு பகவானுக்கு ஆற்றல் உள்ளது.
சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கரிச முனிவரின் மகனாக அவதரித்தவர் தான் குரு பகவான். இவர் கல்வி, கலைகள் என அனைத்தும் கற்றறிந்தவர் என்பதால் தான் தேவர்களுக்கு குருவாகவும் விளங்குகிறார். அதனால்தான் இவருக்கு தேவகுரு என்றும் பெயர் உண்டு. இவரை வியாழ பகவான் என்றும் கூறுவார்கள்.
குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக கூடியவர்.இவருடைய வாகனம் யானையாகும் . இவரின் தசைக்காலம் 16 ஆண்டுகள் ஆகும். இவருக்குப் பிடித்த நிறம் பொன்னிறம் மற்றும் மஞ்சள் நிறமாகும். குரு பகவானை வழிபடும்போது மஞ்சள் மற்றும் பொன்னிற வஸ்திரத்தை சாட்டி கொண்டைக்கடலை மாலை அல்லது நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வது சிறப்பாகும்.
மேலும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளை சொந்த வீடாக கொண்டவர். இவரை வழிபட வியாழக்கிழமை உகந்த நாள் ஆகும். குருவிற்கு பிடித்த சில விஷயங்களை நாம் செய்யும் போது அவரின் பரிபூரண அனுக்கிரகத்தை பெற முடியும். அது என்னவென்று பார்ப்போம்.
ஏழை எளியோருக்கு உதவுவது ,அவர்களை மதிப்பது, கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசான்களை மதிப்பது ,நம் வாழ்வில் வழிகாட்டிகளாக இருக்கும் குருமார்களையும் சித்தர்களையும் மதிப்பது, கல்வி கற்க இயலாதவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்வது , பசுவிற்கு உதவுவது. குறிப்பாக மற்றவர்களை மதிக்க வேண்டும் ,இது போன்ற செயல்களை செய்யும் பொழுது அவரின் அருள் கிடைக்கும்.
குருவின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து விட்டால் நாமும் அவரைப் போல் ஞானத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்குவோம்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…