குருவின் பரிபூரண அருள் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது..!

guru (1)

குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக வழிபாடு என்பது சிறப்பாக கருதப்படுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்ற வாக்கு உள்ளது. அந்த அளவுக்கு குரு பகவானுக்கு ஆற்றல் உள்ளது.

சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கரிச முனிவரின் மகனாக அவதரித்தவர் தான் குரு பகவான். இவர் கல்வி, கலைகள் என அனைத்தும் கற்றறிந்தவர் என்பதால் தான் தேவர்களுக்கு குருவாகவும் விளங்குகிறார். அதனால்தான் இவருக்கு தேவகுரு என்றும் பெயர் உண்டு. இவரை வியாழ பகவான் என்றும் கூறுவார்கள்.

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக கூடியவர்.இவருடைய வாகனம் யானையாகும் . இவரின் தசைக்காலம் 16 ஆண்டுகள் ஆகும். இவருக்குப் பிடித்த நிறம் பொன்னிறம் மற்றும் மஞ்சள் நிறமாகும். குரு பகவானை வழிபடும்போது மஞ்சள் மற்றும் பொன்னிற வஸ்திரத்தை சாட்டி கொண்டைக்கடலை மாலை அல்லது நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வது சிறப்பாகும்.

மேலும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளை சொந்த வீடாக கொண்டவர். இவரை வழிபட வியாழக்கிழமை உகந்த நாள் ஆகும். குருவிற்கு பிடித்த சில விஷயங்களை நாம்  செய்யும் போது அவரின் பரிபூரண அனுக்கிரகத்தை பெற முடியும். அது என்னவென்று பார்ப்போம்.

ஏழை எளியோருக்கு உதவுவது ,அவர்களை மதிப்பது, கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசான்களை மதிப்பது ,நம் வாழ்வில் வழிகாட்டிகளாக இருக்கும் குருமார்களையும் சித்தர்களையும் மதிப்பது, கல்வி கற்க இயலாதவர்களுக்கு கல்வி கற்க உதவி செய்வது ,  பசுவிற்கு உதவுவது. குறிப்பாக மற்றவர்களை மதிக்க வேண்டும் ,இது போன்ற செயல்களை செய்யும் பொழுது அவரின் அருள் கிடைக்கும்.

குருவின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து விட்டால் நாமும் அவரைப் போல் ஞானத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்குவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்