ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம்”சிவன்” சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தார்.
சிவசக்தியால் வந்த சிவராத்திரி…!
அதன்பால் அன்னை பார்வதி தங்களை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார் இறைவனும் அவ்வாறே நடைபெறும் என்று அருள் புரிந்தார். தேவியை போல நந்தி பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் இதனை கடைப்பிடித்து வருவர்.
சிவராத்திரி விரதத்தின் வகை..!
நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி.
விரதம் மேற்கொள்ளும் முறை..!
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
நான்கு கால யாமம் பூஜைகள்…!
மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் வரும் அன்றைய தினம் சிவபெருமானை வணங்கினால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.
முதல் யாமம்…!
வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்,அபிஷேகம் – பஞ்சகவ்யம், அலங்காரம் – வில்வம்,அர்ச்சனை – தாமரை, அலரி,நிவேதனம் – பால் அன்னம்,சக்கரைபொங்கல்,பழம் – வில்வம்,பட்டு – செம்பட்டு,தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்,மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்,புகை – சாம்பிராணி, சந்தணக்கட்டை,ஒளி– புட்பதீபம்.
இரண்டாம் யாமம்…!
வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள், அபிஷேகம்-பஞ்சாமிர்தம் அலங்காரம் – குருந்தை,அர்ச்சனை – துளசி,நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல் ,பழம் – பலா,பட்டு – மஞ்சள் பட்டு,தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்,மணம் – அகில், சந்தனம்,புகை – சாம்பிராணி, குங்குமம்,ஒளி– நட்சத்திரதீபம்.
மூன்றாம் யாமம்…!
வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்,அபிஷேகம் – தேன், பாலோதகம், அலங்காரம் – கிளுவை, விளா,அர்ச்சனை – மூன்று இதழ் வில்வம், சாதி மலர், நிவேதனம் – எள்அன்னம்,பழம் – மாதுளம்,பட்டு – வெண் பட்டு,தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி,மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தணம்,புகை – மேகம், கருங் குங்கிலியம்,ஒளி– ஐதுமுக தீபம்.
நான்காம் யாமம்…!
வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்),அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்,அலங்காரம் – கரு நொச்சி,அர்ச்சனை – நந்தியாவட்டை,நிவேதனம் – வெண்சாதம்,பழம் – நானாவித பழங்கள்,பட்டு – நீலப் பட்டு,தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்,மணம் – புணுகு சேர்ந்த சந்தணம்,புகை – கர்ப்பூரம், இலவங்கம்,ஒளி– மூன்று முக தீபம்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…