நல்ல வேலை கிடைக்க வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..!

Default Image

நல்ல தகுதியுடைய உத்தியோகம் கிடைக்க எளிமையான இந்த ஒரு பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். 

இன்றைய காலத்தில் பலரும் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நினைத்த எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்து வருகிறார்கள். ஒரு சிலர் படிப்பில் மிக குறைந்த நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் வேலை வாய்ப்புகளில் நல்ல நிலையில் இருந்து குடும்பத்தையும் தன்னையும் மேம்படுத்தி கொள்வார்கள். அதே பள்ளி பருவம் முதல் கல்லூரி பருவம் வரை நன்கு படித்து எல்லாவற்றிலும் முதலிடம் பெறும் நபர்கள், வேலைவாய்ப்புக்காக காத்து கொண்டு இருப்பார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு திறமை குறைவாக இருக்கும் என்பதல்ல, அவர்களது நேரம், முன்னோர்களின் புண்ணிய பலன்கள் இவர்களுக்கு கை கொடுக்காமல் இருப்பது தான். இவர்கள் நினைத்த படி நல்ல வேலைக்கு போக வேண்டும் என்றால் அதற்கேற்றாற் போல் தங்களை மெருகேற்றி கொள்வதில் மட்டுமல்லாமல் சில எளிமையான பரிகாரங்களை செய்து வந்தாலே போதும். அவர்கள் நினைத்த படி உத்தியோகத்திற்கு சென்று விடுவார்கள். அரசு வேலைக்கு செல்ல நினைத்தாலும் சரி, அல்லது உங்களுக்கு பிடித்த வேறு விதமான அலுவலக உத்தியோகத்திற்கு செல்வதென்றாலும் சரி இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.

நீங்கள் எதிர்பார்த்த நல்ல பலன்கள் விரைவிலேயே வீடு தேடி வரும். உங்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்க வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று வர வேண்டும். எந்த மாதமாக இருந்தாலும் சரி வளர்பிறையில் வரக்கூடிய புதன் மற்றும் வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த கிழமையில் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு பச்சை நிறத்தை பட்டாடை சாற்ற வேண்டும். இது போன்று செய்தால் நீங்கள் நினைத்து வைத்திருந்த வேலை உங்கள் வசமாகும்.

மேலும் அம்மனுக்கு ஆபரணங்கள் ஏதும் வாங்கி கொடுப்பதும் கூடுதல் சிறப்பு. அதனால் உங்களால் முடிந்த ஆடை, ஆபரணங்கள் அம்மனுக்கு இந்த கிழமையில் வாங்கி கொடுத்து மனதார அம்மனை வழிபட்டு வந்தால் நீங்கள் எதிர்பார்த்த படி வேலை கிட்டும். அதுமட்டும் இல்லாமல், இது போன்று செய்வதனால் உங்கள் உங்கள் வம்சத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அறிவு கூடும். அதேபோல் வேலைவாய்ப்பும் கிடைக்கும். நம்பிக்கையோடு இதனை செய்து வாருங்கள், நல்ல மாற்றம் வாழ்வில் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்