விஷ்ணுபதி புண்ணிய காலம்– விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் சிறப்புகளும் இந்த ஆண்டு வரும் தேதி பற்றி இப்பதிவில் காணலாம்.
ஏகாதசி விஷ்ணுவிற்கு எவ்வளவு சிறப்பு பெற்றதோ அதேபோல் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலமும் சிறப்பு பெற்ற புனிதமான நாளாகும். இந்த புண்ணிய காலம் ஒருசில தமிழ் மாதப் பிறப்பின் முதல் நாளே வரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும் புண்ணிய காலமாகும் .
இப்படி வருடத்திற்கு நான்கு முறை வருகிறது. மாசி முதல் தேதி, வைகாசி முதல் தேதி ,ஆவணி முதல் தேதி ,கார்த்திகை முதல் தேதி இந்த நாட்களில் தான் விஷ்ணுபதி புண்ணிய காலம் வரும்.
இந்த நேரத்தில் செய்யும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு. இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தை மேற்கொள்வது பல ஏகாதசி விரதங்களை செய்ததற்கான சமம் என சாஸ்திரங்கள் கூறுகிறது.
இந்த புண்ணிய காலத்தை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு ரகசியமாகவே இருந்து வருகிறது. இதைத் தெரிந்தவர்கள் இன்றும் இந்த நேரத்தை பயன்படுத்தி பயன் பெற்று வருகிறார்கள்.
வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி 2024 செவ்வாய்க்கிழமை வைகாசி ஒன்று அன்றைக்கு வருகிறது. அதிகாலை 1:30 மணிக்கு துவங்கி காலை 10:30 க்கு முடிவடைகிறது இந்தக் குறிப்பிட்ட நேரத்தை தவற விடாதீர்கள்.
இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள கொடி மரத்தை 27 முறை வலம் வர வேண்டும் .ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் 27 பூக்களை வைக்க வேண்டும். கொடி மரத்தை சுற்றி வரும்போது கருவறை பிரகாரத்துடன் சேர்த்துதான் சுற்ற வேண்டும்.
காலை 10:30-க்குள் கோவிலுக்கு சென்று வரவேண்டும். மேலும் வீட்டிற்கு வரும்போது மஞ்சள் மற்றும் கல் உப்பை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து பூஜை செய்து பிறகு அதை பயன்படுத்த வேண்டும்.
வருடத்தில் வரும் நான்கு விஷ்ணுபதி புண்ணிய காலத்தையும் தொடர்ந்து செய்து வரும்போது பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். தரித்திரம் நீங்கும், வறுமை ஒழியும். செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.
ஆகவே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிக அதிகமாகவும் பூரணமாகவும் இருக்க கூடிய அற்புத நாளை தவற விடாதீர்கள்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…