தினமும் தோல்வியை சந்தித்து வருகிறீர்கள் என்றால் இதனை மட்டும் குளிக்கும் தண்ணீரில் கலந்தால் போதும்.
வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தோல்வியில் முடிகிறது என்றால் பரவாயில்லை. ஆனால் நீங்க எடுக்கும் எல்லா முடிவுகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறீர்கள் என்றால் அது நிச்சயம் கண் திருஷ்டியாக இருக்கும். அல்லது உங்கள் அருகில் இருப்பவர்கள் அல்லது உங்களைப் பிடிக்காதவர்களின் பார்வை அல்லது பொறாமை போன்ற குணங்களினால் உங்களுக்கு நீங்கள் எடுத்த காரியங்கள் எதுவும் நிறைவேறாமல் தடைபட்டுக் கொண்டே இருக்கும். இது போன்ற நிகழ்வு உங்களுக்கு நடக்கிறது என்றால் நிச்சயமாக இந்தப் பதிவு உங்களுக்கானது.
இதனை முயற்சி செய்து பாருங்கள், உங்கள் வாழ்க்கையில் மேலும், மேலும் அடிபட்டு கொண்டே இருந்தீர்கள் என்றால் அதற்கு விடிவு காலம் பிறந்து விடும். முதலில் உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்க வேண்டும். மேலும் நேர்மறை ஆற்றல் அதிகரித்து இருந்தாலே உங்களது சிந்தனை நேர்மையாகவே யோசிக்க வைக்கும். எந்த ஒரு எதிர்மறை ஆற்றலையும் உங்களுக்கு உள்ளே நுழைய விடாதீர்கள். எப்பொழுதும் நேர்மையாக பேசுங்கள். இதனை செய்துவிடலாம், இதனை கண்டிப்பாக வெற்றி கொள்ளலாம், இதை என்னால் செய்ய முடியும் என்று நேர்மறையான சிந்தனையோடு இருந்தால் உங்களால் எளிமையாக வெற்றி பெற இயலும்.
மேலும் உங்களிடம் எதிர்மறை ஆற்றல் இருந்தால் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. தொடர்ந்து தோல்விகளையும் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து கொண்டிருப்பீர்கள். இதனால் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை, நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு எண்ணம் உங்களிடம் தோன்ற ஆரம்பிக்கும். அதனால் எப்பொழுதும் உங்களால் முடியும், உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்ற எண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். நீங்கள் நேர்மறையான எண்ணத்தோடு இருந்தும் நீங்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்றால் அதற்காக மனம் வருந்தி நம்மால் முடியாது என்ற சிந்தனைக்கு வரவேண்டாம்.
தோல்வியை தழுவினாலும் இது ஒரு பாடம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள். உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை விலக்கிக் கொள்வதற்காக இந்த ஒரு முறையை செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் சரி, உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றலும் சரி விலகி செல்லும். மிகவும் எளிமையான முறையான குளிக்கும் போது தண்ணீரில் எதை பயன்படுத்தினால் எதிர்மறை ஆற்றல் விலகி விடும் என்பதை இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக இது போல் குளித்து வாருங்கள். உங்களை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல் நிச்சயமாக வெளியேறிவிடும். குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து கரைத்துக் கொள்ளுங்கள். இந்த உப்பு நீரில் ஒருமுறை நீங்கள் குளித்தாலே உங்களிடம் இருக்கும் கண் திருஷ்டிகள், தரித்திரம் அனைத்தும் உங்களை விட்டு ஓடிவிடும். மேலும் உங்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். இதனால் எதிர்மறை சக்தி உங்களிடம் இருக்காது. உப்பு கலந்த நீரில் குளித்தால் இவ்வளவு நன்மைகளா? என்ற கேள்வி உங்களிடம் இருக்கலாம்.
பொதுவாகவே கடலில் குளித்தால் நம்முடைய பாவங்கள் தீரும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்போல செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் கடல் நீரில் குளித்து வந்தால் உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகி வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் என்பதை நீங்களே உணர முடியும். குறிப்பாக வளர்பிறையில் இந்த கிழமைகளில் நீங்கள் கடலில் குளித்து வந்தால் நல்ல பலன் கிட்டும்.
மேலும் கடலில் குளித்துவிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அந்த கடல் நீரை சிறிது வீட்டிற்குள் கொண்டு வந்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து உங்களது வீடு, நீங்கள் தொழில் செய்யும் இடம், அலுவலகம் போன்ற இடங்களில் லேசாக தெளித்து விடலாம். இப்படித் தெளிப்பதன் மூலமாக அங்கிருக்கும் தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் விலகிவிடும். மேலும் உங்களுக்கு தடைபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களும் நீங்கி வெற்றியை மேன்மேலும் காண்பீர்கள். எளிமையாக இருக்கும் இந்த பரிகாரத்தை வீட்டிலேயே குளிக்கும் போது தண்ணீரில் கல் உப்பைக் கலந்து கரைத்து விட்டு அந்த தண்ணீரில் குளிப்பது மிகவும் சிறந்த பலனை அளிக்கும்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…