வாஸ்து நாள் 2025 ல் வரும் நாட்கள் ..!

வாஸ்து சாஸ்திர கொள்கைப்படி ஒரு மனையை தேர்ந்தெடுப்பது உரிமையாளருக்கு  அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் தருவதாக நம்பப்படுகிறது.

vastu (1)

வாஸ்து சாஸ்திரம் என்றால் என்ன, இந்த ஆண்டில் வரும் தேதி ,நேரம் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் .

சென்னை: நம் கட்டும் கட்டிடம் பஞ்சபூதங்களுக்கு உட்பட்டு கட்டுவதால் இயற்கை பல நன்மைகளை கொண்டு வந்து  சேர்ப்பதாக நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரம் பல காலங்களாக பின்பற்றப்பட்டு நடைமுறையில் உள்ள முறையாகும். குறிப்பாக   அரண்மனைகள், மிராசுதாரர்களின் வீடுகள், கோவில் வீடுகள், வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டதாகும்.

வாஸ்து என்றால் என்ன ?

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு உரிய முறைகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாக கூறப்படுகிறது .வாஸ்து சாஸ்திர கொள்கைப்படி ஒரு மனையை தேர்ந்தெடுப்பது உரிமையாளருக்கு  அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் தருவதாக நம்பப்படுகிறது.

வாஸ்து பகவான் இடது கையை கீழேயும் வலது கையை மேலேயும் வைத்து படுத்திருப்பதாக சாஸ்திரம் கூறுகின்றது. ஒவ்வொரு மாதமும் அவர் விழிப்பதில்லை என்றும் குறிப்பிட்ட 8 மாதங்கள் குறிப்பிட்ட நாழிகையில் விழித்திருப்பதாகவும் அந்த நேரத்தில் வாஸ்து செய்வது சிறப்பாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடைசி 36 நிமிடங்கள் வாஸ்து செய்தால் வீடு நிலைத்து நிற்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது .

2025 ஆம் ஆண்டிற்கான வாஸ்து நாட்கள்;

வாஸ்து நாட்கள் ஒரு வருடத்திற்கு எட்டு முறை மட்டுமே வரும் என சொல்லப்படுகிறது. அதன்படி இந்த வருடம் ஜனவரி 25 [தை மாதம் 12ஆம் தேதி] சனிக்கிழமை, காலை 10 ;41 க்கு துவங்கி  காலை 11; 17 க்கு முடிவடைகிறது.

மார்ச் ஆறாம் தேதி [மாசி 22 ]வியாழக்கிழமை காலை 10:32 துவங்கி 11 ;8க்கு முடிவடைகிறது.

ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி [சித்திரை 10] புதன்கிழமை காலை 8 ;54க்கு தூங்கி 9; 30க்கு முடிவடைகிறது.

ஜூன் 4ஆம் தேதி[ வைகாசி 1]புதன் கிழமை காலை 8 மணிக்கு துவங்கி காலை 10;34 க்கு முடிவடைகிறது.

ஜூலை 27 [ஆடி 11] ஞாயிற்றுக்கிழமை காலை 7:44க்கு  துவங்கி 8;20 க்கு  முடிவடைகிறது .

ஆகஸ்ட் 22 [ஆவணி ஆறு ]வெள்ளிக்கிழமை காலை 7 ;23 க்கு துவங்கி 7;59 க்கு  முடிவடைகிறது.

அக்டோபர் 28 [ஐப்பசி 11 ]செவ்வாய்க்கிழமை காலை 7; 44 க்கு துவங்கி 8; 20 க்கு முடிவடைகிறது .

நவம்பர் 24 [கார்த்திகை 8 ]திங்கள் கிழமை காலை  11 ;29க்கு துவங்கி 12;05 க்கு முடிவடைகிறது.

இந்த 2025 ஆம் ஆண்டிற்கான இந்த குறிப்பிட்ட நாட்களில் வாஸ்து பூஜை செய்வது சிறப்பாக கூறப்படுகிறது .இந்த வாஸ்து நாட்களில் அஷ்டமி ,நவமி, கரிநாள், மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இது போன்ற எந்த ஒரு நாட்களும், கிழமைகளும் பார்க்கத் தேவையில்லை என்றும் சாஸ்திரம் கூறுகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்