கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.
மைத்ரேய மூகூர்த்தம் :
கடன் இல்லாமல் இவ்வுலகில் வாழ்வது அரிது .அனைவருக்குமே அவரவர் சக்திக்கு ஏற்ப கடன் நிச்சயம் இருக்கும் .நம் இவ்வுலகில் பிறந்தது கூட பூர்வ ஜென்ம கடனை அடைப்பதற்கு தான்.
இப்படி நம் பிறப்பில் கூட கடன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடன் இல்லா வாழ்க்கை தான் நிம்மதி என்பது நிதர்சியான உண்மை. கடன் அடைய நம் முன்னோர்களும் சித்தர்களும் கூறுகின்ற ஒரு வழி தான் மைத்ரேய முகூர்த்தம் .
இது மாதம் இருமுறை வரும். சுப நிகழ்ச்சிகள் செய்ய நம் சாஸ்திரத்தில் நேரம் குறிக்கப்படுகிறது. அதுபோல் கடன் வாங்கவும் அடைக்கவும் ஒரு நேரம் உள்ளது அதை பின்பற்றினால் மீண்டும் வாங்கும் நிலை ஏற்படாது.
மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன?
அஸ்வினி நட்சத்திரமும் மேஷ லக்னமும் இணையும் நேரமும் அதேபோல் அனுஷம் நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் இணையும் நேரம் தான் மைத்ரேய முகூர்த்தம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
மே மாதத்திற்கான மைத்ரேய முகூர்த்தம்:
இந்த மாதத்திற்கான மைத்ரேய முகூர்த்தம் மே 7 அதிகாலை 4:29க்கு தொடங்கி 6. 16 வரை உள்ளது .அடுத்து மைத்ரேய முகூர்த்தம் மே 23 மாலை ஐந்து நாற்பத்தி எட்டுக்கு தொடங்கி 7. 59 வரை உள்ளது.
இந்த நேரத்தில் நீங்கள் யாருக்கு கடன் தொகை கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு செலுத்தி விடலாம் அல்லது இந்த நேரத்தில் அவருக்கான வட்டித் தொகையும் அசல் தொகையில் ஒரு பகுதியையும் எடுத்து வைத்து பிறகு செலுத்திக் கொள்ளலாம்.
என்னதான் ஜோதிடத்தில் ஒரு சிலருக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் நம்புபவர்களுக்கு இது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.
எனவே இந்த நேரத்தை பயன்படுத்தி மீண்டும் கடன் வாங்காமல் தப்பித்துக் கொள்ள ஜோதிடம் ரீதியாக வழிகாட்டப்படுகிறது .இதை தவறவிடாமல் பயன்படுத்தி பயன் பெறலாம் .