இனி திருப்பதியில் நன்கோடையாளர்க்கு.! வழங்கப்படும் தரிசனம் ரத்தாகிறது..!!
திருப்பதி திருமலையில் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் நன்கொடை அளிப்பவர்க்கு தேவஸ்தானம் ஆண்டிற்கு ஒருமுறை தரிசனம் வசதியை அளித்து வந்த நிலையில் தற்போது திருமலையில் கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாகி வருகிறதால் தரிசனத்திற்கு நெடுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் கோடை விடுமுறை முடியும் வரை நன்கொடையாளர்களுக்கு வழங்கும் தரிசனத்தை ரத்து செய்துள்ளது தேவஸ்தானம் இதே போல் இந்த நாட்களில் பரிந்துரை கடிதங்களின் மூலம் தரிசனம் செய்யும் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்