நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான நிகழ்ச்சிகள் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்று விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், தனபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகத்துக்காக கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் அரங்கம் முன்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 84 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு அங்கு வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி சென்னை, பாண்டிச்சேரி, மதுரை, தஞ்சாவூர், திருத்தனி, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரிகள் நெல்லை வந்துள்ளனர்.
நேற்று காலையில் மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. மாலையில் விக்னேசுவர பூஜை, புண்யாக வாசனம், கலாகர்ஷணம், கடம்யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜை தொடங்கியது
இன்று (புதன்கிழமை) காலை இரண்டாம் கால பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை நான்காம் காலை யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம் கால பூஜையும் நடக்கிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் அன்று அதிகாலை 6-ம் கால பூஜை நடக்கிறது. பின்னர் காலை 9.30 மணிக்கு புனிதநீர் ராஜகோபுரம், விமானங்கள், நெல்லையப்பர், காந்திமதி அம்மாள், வேணுவன நாதர் ஆகியவர்களுக்கு தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…