நெல்லை சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில்..!! வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!!
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 8 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்