ஒரு சிலர் வறுமையின் பிடியில் சிக்கி வெளிவர முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள் அவர்கள் நாளை வரவிருக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் சிறப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
மாசி மாதம் 1ந் தேதி( பிப்ரவரி 13,2024) நாளை விஷ்ணுபதி புண்ணிய காலம் வர இருக்கிறது. இந்த காலம் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வரும். இந்நாளில் விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் ,கருட பகவானையும் பூஜை செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் சிறப்பு:
விஷ்ணுவிற்கு உகந்த திதி என்றால் அது ஏகாதசிதான். ஆனால் இந்த ஏகாதசியை விட சிறந்த நாள் என்றால் அது விஷ்ணுபதி புண்ணிய காலம் தான். வைகாசி ,ஆவணி, கார்த்திகை, மாசி இந்த மாதங்களில் வரும் முதல் தேதியிலே விஷ்ணுபதி காலம் வந்துவிடும்.
பூஜை செய்யும் நேரம் மற்றும் பூஜை செய்யும் முறை:
இந்நாளில் மகாவிஷ்ணுவிற்கும் மகாலட்சுமிக்கும் உண்டான ஸ்தோத்திரங்களை படித்து பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். விஷ்ணுபதி புண்ணிய காலம் பிப்ரவரி 13 காலை 1 30 க்கு தொடங்கி காலை 10.30க்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு எது சௌகரியமாக உள்ளதோ அதை பயன்படுத்தி பூஜை செய்து பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள கொடி மரத்தை 27 முறை சுற்ற வேண்டும், வலம் வரும்போது ஒவ்வொரு முறை சுற்றுக்கும் ஒவ்வொரு பூக்கள் வைக்க வேண்டும். கொடிமரம் இல்லாத கோவில்களில் பிரகாரத்தை வலம் வரலாம். அன்றைய தினம் துளசி பூஜை, கோ பூஜை செய்ய உகந்த தினம் ஆகும்.
பலன்கள்:
இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் நாம் செய்யும் பூஜை, பல ஏகாதசி விரதங்களை செய்த பலனைக் கொடுக்கிறது என்பது ஐதீகம். செல்வ செழிப்பான வாழ்க்கை, மன நிம்மதியான குடும்பம் கிடைக்கும். மோட்சம் கிடைக்கும் .பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம்.
ஆகவே நாளை வரும் இந்த விஷ்ணுபதி காலத்தை தவறவிடாமல் வழிபாடு செய்து விஷ்ணுவின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் பெற்று செல்வ செழிப்போடு வாழலாம்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…