இன்றைய ராசி பலன்கள்.. உங்கள் ராசிக்கு இன்று எப்படி இருக்கும்.!
Today Horoscope-மாசி மாதம் 19ஆம் தேதி[ மார்ச் 2, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.
மேஷம்:
இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். காணாமல் போனது திரும்ப கிடைக்கும். இன்று நீங்கள் கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம். ராசியான நிறம்= வெள்ளை
ரிஷபம்:
இன்று உத்தியோகத்தில் இடம் மாற்றம் ஏற்படலாம் .கடன் அடைக்க கூடிய சூழ்நிலைகள் இருக்கும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். அர்த்தநாதீஸ்வரரை வழிபாடு செய்யலாம். ராசியான நிறம்= மஞ்சள்.
மிதுனம்:
இன்று உங்கள் மன வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். இன்றுஅபரிவிதமான வெற்றிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். காமாட்சி அம்மன் வழிபாடு மேன்மையை தரும். இன்றைக்கு ராசியான நேரம்= குங்குமம்
கடகம்:
இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் மதிப்பு மரியாதை கிடைக்கும், சக பணியாளர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள். நினைத்த காரியம் கைகூடும். ராமச்சந்திரா வழிபாடு மேன்மையை தரும் .ராசியான நிறம் =மஞ்சள்.
சிம்மம்:
இன்றைய நாளில் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். நேர்மறையான எண்ணங்கள் தோன்றும் .கிருஷ்ணர் வழிபாடு மேன்மை தரும். ராசியான நிறம்= மஞ்சள்.
கன்னி:
இன்று பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும், புதிய வாய்ப்புகள் கூடி வரும். குடும்பத்திற்காக செலவு செய்ய நேரிடும். ராசியான நிறம் =பொன்னிறம்.
துலாம்:
நினைத்த காரியங்கள் கைகூடும் நாள் ..தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். மன நிம்மதி காணப்படும். அருணாச்சலேஸ்வரர் வழிபாடு செய்தால் மேன்மை கிடைக்கும். ராசியான நிறம்= மஞ்சள்.
விருச்சிகம்:
வண்டி வாகனங்களுக்காக செலவு செய்ய நேரலாம். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம் .இன்று விரதம் மேற்கொள்வது நல்லது, இன்றைய நாள் சிறப்பாக இருக்க குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபாடு செய்யவும். ராசியான நிறம்= மஞ்சள்.
தனுசு:
இன்று இரட்டிப்பான வெற்றிகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். காஞ்சி வரதராஜனை வழிபாடு செய்யலாம். ராசியான நிறம் ஊதா.
மகரம்:
இன்று போக்குவரத்து சார்ந்து நிகழ்வுகளில் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் துணையின் பெயரில் செய்து வரலாம் .இன்றைய நாள் சிறப்பாக அமைய திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்யலாம்.
கும்பம்:
இன்றைய நாளில் டென்ஷன் குறையும் நாளாக இருக்கும். பிரயாணம் ஏற்பட வாய்ப்புள்ளது. ராசியான நிறம் =பொன்னிறம்.
மீனம்:
இன்றைய நாள் தாராளமான பணப்புழக்கம் ஏற்படும். நிம்மதியான வாழ்க்கை இருக்கும். தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும்/ முடிந்தவரை டென்ஷனை குறைக்கவும். எதிர்பாராத வெற்றிகளும் கிடைக்கும். ராசியான நிறம் =பச்சை.