இன்றைய ராசி பலன்கள்.! உங்கள் ராசிக்கு இந்த நாள் எப்படி இருக்கும்..!

Published by
K Palaniammal

மாசி மாதம் 8ம்  தேதி[ பிப்ரவரி 20, 2024] ராசி பலன்கள். இன்றைய நாளில் உங்களுக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று அற்புதமான பலன்கள் கிடைக்கும். உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும். இன்று பல ஆச்சரியங்களையும் காணலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும் .உங்கள் துணையின் மீது அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று அதிர்ஷ்டமான பண வரவு ஏற்படும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

ரிஷபம்:

இன்று சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும் ,சக பணியாளர்களுடன் விவாதம் காணப்படும். உங்கள் துணையுடன் ஒரு விவாதத்தில் ஈடுபடுவீர்கள். இன்று பண இழப்புகளை சந்திப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:

இன்று எதிர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பணியிடத்தில் பல தடைகள் வந்தாலும் குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள். உங்களின் வித்தியாசமான அணுகு முறையை உங்கள் துணையுடன் வெளிப்படுத்துவீர்கள். இன்று பணம் செலவு செய்ய நேரிடும். பல் வலி ,சளி போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

கடகம்:

பதட்டம் காரணமாக சில சவுகரியங்களை இழப்பீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினால் நன்மை தரும். பணிகளை செய்வதில் திட்டமிட்டு செயல்படுங்கள் .உங்கள் துணையுடன் உறவில் மகிழ்ச்சி குறையும். உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.  ஆரோக்கியத்தில் கவனம் தேவை ,உணவில் கவனம் செலுத்துவது அவசியம்.

சிம்மம்:

இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். இன்று ஊக்கத்தொகையும் சலுகையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் இனிமையாக பழகுவீர்கள். இன்று உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

கன்னி:

இன்று எடுக்கப்படும் முக்கியமான முடிவுகள் மூலம் நல்ல பலன்களை பெறலாம். உங்களிடம் இன்று நகைச்சுவை உணர்வு காணப்படும். உங்கள் துணையுடன் காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் உங்கள் கடினமான உழைப்பிற்கு இன்று ஊக்கத்தொகை கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது.

துலாம்:

இன்று அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். உங்கள் முயற்சி தான் உங்களுக்கு புகழைப் பெற்றுத் தரும். இன்றைய நாளில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இன்று உங்கள் துணையுடன் பேசுவதை தவிர்க்கவும். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:

இன்று பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அமைதியாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கவனம் செலுத்துங்கள். இன்று பணியிடைச்சூழல் சிறப்பாக இருக்காது. உங்கள் மனக்குழப்பத்தை துணையிடம் காண்பிப்பீர்கள் இதை தவிர்க்கவும். நிதி வளர்ச்சியில் இன்று சில கட்டுப்பாடுகளை சந்திக்க நேரும் . இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு:

இன்று உங்கள் செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். செய்யும் செயல்களில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. இன்று பணிகளை கையாள்வது கடினமாக உணர்வீர்கள். துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் எழலாம். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த உடற்பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது.

மகரம்:

இன்று உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாகவும் இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்:

புதிய தொடர்புகள்  ஏற்படுத்திக் கொள்வதற்கு இன்று உகந்த நாள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி நற்பெயரை எடுப்பீர்கள் உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். இன்று கணிசமான தொகையை சம்பாதிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மீனம்:

இன்று சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையுடன் குழப்பத்தை விட்டு தெளிவாக பேசுவதன் மூலம் நல்லுறவு ஏற்படும். இன்றைய நாளில் பணம் தேவைகள் அதிகமாக இருக்கும். இன்று சற்று பலவீனமாக உணர்வீர்கள்.

Recent Posts

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

19 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

2 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

12 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

13 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

14 hours ago