இன்றைய ராசி பலன்கள் .!உங்கள் ராசிக்கு இன்று எப்படி இருக்கும்?

Published by
K Palaniammal

Today horoscope-மாசி மாதம் 22ஆம் தேதி [மார்ச் 5 ,2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும், இறைவழிபாட்டின் மூலம் மன அமைதி பெறலாம் .உங்கள் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். இன்று கூடுதல் செலவு ஏற்படும். ஒவ்வாமை பாதிப்பு ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

இன்று உங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் பேசும் போது கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று பணியிடத்தில் உங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் கிடைக்கலாம். உங்கள் துணையுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று அதிக பண வரவு காணப்படும் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

கடகம்:

இன்று அதிர்ஷ்டமான நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் அளிக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் இனிமையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. பணியிடச் சூழல் கடினமானதாக இருக்கும். உங்கள் துணையுடன் எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்கள் பண தேவைகளை பூர்த்தி செய்து செய்யும் அளவிற்கு பணம் காணப்படாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.

கன்னி:

இன்று அனுகூலமான நாளாக இருக்காது, நற்பலன்கள் தாமதமாக கிடைக்கும், பிரார்த்தனையில் ஈடுபடுவது ஆறுதல் அளிக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் பதட்டமான மனநிலையை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை எண்ணெய்  உணவுகளை தவிர்க்கவும்.

துலாம்:

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும் .புதிய தொடர்புகள் கிடைக்கும், நட்பு வட்டாரம் விரிவடையும்  பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். உங்கள் துணையுடன் சம நிலையோடு பழகுவீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

விருச்சிகம்:

இன்று அணுகூலமான  பலன்கள் கிடைக்காது. பணியில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் ஏற்படும் பதட்டம் காரணமாக உங்கள் துணையுடன் தவறு கண்டுபிடிப்பீர்கள். இன்று மிதமான பணவரவு காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை எண்ணெய்  பதார்த்தங்களை தவிர்க்கவும்..

தனுசு:

இன்று உங்களுக்குப் பொறுமை தேவை,நல்ல வாய்ப்புகள் தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பண இழப்பு காணப்படுகிறது. பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது தியானம் மேற்கொள்வது சிறந்தது.

மகரம்:

உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும், அதனால் பதட்டம் படாமல் செயல்களை மேற்கொள்ளவும். பணிகளை திட்டமிட்டு செய்வது சிறந்தது. உங்கள் துணையின் விருப்பப்படி நடந்து கொல்ல முயலுங்கள். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

கும்பம்:

இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் பணியிடத்தில் துடிப்புடன் செயல்படுவீர்கள் .உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமான உறவை அனுபவிப்பீர்கள் .இன்று போதிய பணம் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்:

இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் தனி திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று சிறிய அளவில் கடன் வாங்க நேரலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

4 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

5 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

7 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

8 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

8 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago