இன்றைய ராசி பலன்கள்.! உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கும்?
Today horoscope-பங்குனி மாதம் பதினோராம் தேதி[ மார்ச் 24, 2024] இன்றைக்கான ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்:
இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொண்டால் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உங்கள் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் நகைச்சுவை அணுகுமுறை துணையுடன் ஆன உறவை நல்வழிப்படுத்தும். கடின உழைப்பிற்கு ஊதியம் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:
இன்று நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம், இன்று அமைதியாக இருங்கள். உங்கள் துணையுடன் சகஜமாக நடந்து கொள்வது நல்லது. செலவுகள் ஏற்படும் ,ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்:
உங்கள் அணுகு முறையில் பொறுமை தேவை, இன்று சற்று அமைதியின்றி காணப்படுவீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளுடன் சில விரும்பத் தகாத தருணங்களை சந்திக்க நேரும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். நிதியில் ஸ்தரத்தன்மை பராமரிக்க சிறப்புடன் திட்டமிட வேண்டும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்:
இன்று நீங்கள் இனிமையான வார்த்தைகளை பேசி நண்பர்களை மகிழ்விப்பீர்கள். பணியின் திறமையாக செயல்படுவீர்கள். உங்கள் துணையுடன் உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
சிம்மம்:
இன்று நீங்கள் உங்கள் எதிர்மறையான சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். பணிகள் அதிகமாக காணப்பட வாய்ப்புள்ளது .உங்கள் துணையுடன் பேசும் போது சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்க்கவும். நிதியில் தரத்தன்மை காணப்படும், ஆரோக்கியத்தின் கவனம் தேவை.
கன்னி:
இன்று நீங்கள் நேர்மறையான எண்ணங்களை சிந்திப்பதன் மூலம் நல்ல பலன்களை அடையலாம் ,பணியில் தடைகள் ஏற்பட்டாலும் சமாளித்து செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காணப்படும் .கூடுதல் செலவுகள் ஏற்படலாம் ,செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காணப்படும்.
துலாம்:
இன்று பதட்டமான சூழ்நிலையில் இருப்பீர்கள், பிரார்த்தனை மேற்கொள்ளுவது நல்லது .பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் நட்பான முறையில் அணுக வேண்டும். தேவையற்ற செலவு செய்ய நேரலாம். பதட்டம் காரணமாக ஆரோக்கிய குறைவு ஏற்படும்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை எளிதாக கையாள்வீர்கள். உங்கள் துணையுடனான உறவில் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள் .எதிர்பாராத பண வரவிற்கு சாத்தியம் உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகிறது.
தனுசு:
இன்று உங்களுக்கு சாதகமான நாள், நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பணியிட சூழல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் இனிமையான வார்த்தைகளின் மூலம் துணையை மகிழ்விக்கலாம் .பண வரவு காணப்படுகிறது, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்:
இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும் ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது பணி நிமித்தமான பயணம் இருக்கும். இந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும் தேவையில்லாத செலவுகள் ஏற்படலாம் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்:
இன்று அதிக எதிர்பார்ப்பை தவிர்க்க வேண்டும், அதிகமான பணிகள் கவலையை அளிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிக்க தவறுவீர்கள். நிதி நிலைமை அதிர்ப்தி அளிக்கும் ,ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மீனம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்,முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணிகளை குறித்த நேரத்துக்கு முன் முடிப்பீர்கள், உங்கள் துணையுடன் நல் உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.