12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பொழுது எப்படி இருக்கும்.!

Published by
கெளதம்

இன்றைய ராசி பலன்கள் : ஆடி மாதம் பத்து ஒன்பதாம் தேதி, ஞாயிறு [ஆகஸ்ட் 4, 2024] இன்றைக்கான ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்:

இன்று உங்களுக்கு பொறுமை ரொம்ப ரொம்ப முக்கியம். உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிக பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் பொறுமை நடந்து கொள்ளுங்கள். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. உணவின் முறையிலும் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

ரிஷபம்:

காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சிறிது கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். இதனால், உங்கள் துணையுடன் பொறுமையாகவும் அமைதியாக சமாளிக்க வேண்டும். பணம் அதிமாக வரக்கூடும், கவனமாக செலவு செய்யுங்கள். இன்று நிலுவையில் உங்கள் பணிகளை முடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். வேலைபளு அதிகமாக இருக்கும் என்பதால், மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலில் போட்டி இருந்தாலும், நிதானமாக செயல்பட வேண்டும்.

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நல்லது ஏற்படும். உங்கள் துணையுடன் நீங்கள் நிறைய மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் சேமிப்பு உயரும் வாய்ப்புகள் உள்ளன. புதிய முதலீடுகளை மேற்கொள்ள நல்ல நாளாகும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்படலாம்.
தொழில் மற்றும் வேலைகளில் சீராக இருக்கும், புதிய பொறுப்புகளை ஏற்பது கைகூடும்.

கடகம்:

இன்றைய நாள் கடகம் ராசியினருக்கு பல சாதகமான விஷயங்கள் கைக்கூடி வரும். இன்று கடினமான காரியங்களை எளிதில் செய்து முடிக்க முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக செயல்களுக்கு நேரம் ஒதுக்குங்கள், இதனால் நற்பலன்கள் கிடைக்கும். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்:

இன்றைய நாள் சிம்ம ராசியினருக்கு சில சவாலாக இருக்க கூடும். ஆனால் நல்ல முடிவுகளையும் தரும். பணத்தை தக்க வைத்து கொள்ளா வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும் அனாவசிய செலவுகள் தவிர்க்கவும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சுமுகமாக முடியும்.

கன்னி:

இன்றைய நாள் கன்னி ராசியினருக்கு சில சவால்களுடன் துவங்கலாம், ஆனால் நீங்க கடினமாக உழைத்தால் வெற்றி காணலாம். தொழிலில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும், ஆனால் அவற்றைப் பெற நீங்கள் கூடுதல் முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம், ஆனால் பயணங்களை முன்னேறி முடிக்க முயலுங்கள்.

துலாம்:

இன்றைய நாள் துலாம் ராசியினருக்கு சவாலாக இருக்கு கூடும். பணியிடத்தில் முன்னேற்றம் காண்பது உறுதி. பயணங்கள் பலனளிக்கும், மேலும் புதிய வாய்ப்புகளை உருவாகும். உங்கள் பண வசதி நல்ல நிலைமைக்கு திரும்பும். செலவுகள் அதிகரிக்கும், ஆனால் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையை உயர்த்தும், மனம் மகிழ்விக்கும் நாளாக இன்று இருக்கும்.

விருச்சிகம்:

இன்றைய நாள் விருச்சிகம் ராசியினருக்கு சில சவால்கள் எதிர் கொள்ளும் நிலைமை ஏற்படலாம். வேலைகள் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணக்கூடும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும் மற்றும் எதிரிகளை எதிர்கொண்டு வெற்றி காணலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். நாளை மிகவும் சாதகமாக இருக்கலாம், ஆனால் எச்சரிக்கையாக இருந்து செயல்படவும்.

தனுசு:

இன்று, உங்கள் அன்றாட வேலைகளில் சில சவால்களை எதிர்கொள்ளக்கூடும். ஆனால், உங்கள் நம்பிக்கையுடன் அதை சமாளிக்க முடியும். உங்கள் ஆர்வமும் உழைப்பும் பணவரவிற்கு நல்ல முடிவுகளை அளிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படுவீர்கள். குடும்பத்துடன் நேரத்தை கழிக்க நன்றாக இருக்கும். புதிய அனுபவங்களைச் சேர்ப்பதற்கும் இதுவொரு சிறந்த நாள் ஆகும்.

மகரம்:

பணியிடத்தில் வெற்றி கிடைக்கும், உங்கள் துணையுடன் திருப்திகரமான உறவு காணப்படும், உங்கள் பண வசதியை மேம்படுத்த புதிய வாய்ப்புகள் வரலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், தேவையான பரிசோதனைகளைச் செய்யவது நல்லது. மொத்தமாக, இந்த நாளில் உங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை அமல்படுத்த உதவும் நேரமாக இருக்கும்.

கும்பம்:

இன்றைய நாள் கும்பம் ராசியினருக்கு சாதகமான நாள், இன்று கூடுதல் பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் உழைப்பை மேம்படுத்துவதற்கும், உங்கள் திறமைகளைப் பயன்படுத்துவதற்கும் இது சிறந்த நாள். உடல் நலத்தில் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. இன்று பண வரவு அதிகமாக காணப்படும்.

மீனம்:

மீனம் ராசியினருக்கு இன்றைய நாள் சாதகமான நாள். இன்று கூடுதல் பலன்கள் கிடைக்கும், பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாள். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்படும்.

Published by
கெளதம்

Recent Posts

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…

16 minutes ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…

1 hour ago

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை!

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

2 hours ago

புத்தாண்டு ஏமாற்றம்… வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான ”விடாமுயற்சி” டிரைலர்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…

12 hours ago

“அரசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு” கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…

12 hours ago

வெளியானது ‘Rise Of Dragon’ பாடல்… வைப் செய்த பிரதீப் – கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…

13 hours ago