இன்றைய ராசி பலன்கள்.. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்..!

Published by
K Palaniammal

மாசி மாதம் 5[ பிப்ரவரி 17,2024]ஆம் தேதிக்கான ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும், உங்கள் சக பணியாளர்களிடம் சில பிரச்சனைகள் உருவாகலாம். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும். பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:

இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகள்  அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் சமநிலையான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத செலவினங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய குறைவு காணப்படும்.

மிதுனம்:

இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்த அற்புதமான நாள். பணி செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக சூழல் அமையும். உங்கள் துணையுடன் இன்று எளிதான அணுகு முறையை கொண்டிருப்பீர்கள். நிதி நிலைமை சீராகவும் பாதுகாப்பாகவும் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:

இன்றைய நாளில் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். நீங்கள் உங்கள் பணியில் பிரகாசிப்பீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக காணப்படும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:

இன்று செய்யப்படும் செயல்களில் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. உங்கள் துணையின் மனநிலை மாறுபாடுகள் உங்கள் அமைதியை குறைக்கும். பணப்புழக்கம் குறைவாக காணப்படும். ஒவ்வாமை காரணமாக இருமல் வர வாய்ப்புள்ளது.

கன்னி:

இன்று எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள், பிரார்த்தனைகளை மேற்கொள்வது சிறந்த பலனை தரும். பணிகளை நீங்கள் நினைத்த நேரத்தில் முடிப்பது கடினமாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நடக்கும் பொழுது கவனமாக நடக்க வேண்டும்.

துலாம்:

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம் உங்கள் பணிகளை இன்று உற்சாகத்துடன் செய்வீர்கள் உங்கள் துணையுடன் நகைச்சுவையுடன் பேசுவது மூலம் உறவு பழமாகும் நிதி நிலைமை நன்றாக இருக்கும் ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது.

விருச்சிகம்:

இன்று உங்கள் லட்சியங்கள் நிறைவேறும் பரிபூரணமான நாள் ,முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். ஒப்புக்கொண்ட பணிகளை முடித்து தர வேண்டும் என்ற மன அழுத்தம் காணப்படும். உங்கள் துணையுடன் அன்பான அணுகு முறையை மேற்கொள்வது நல்லது. நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

தனுசு:

இன்று தடைகளை வென்று திருப்திகரமாக இருக்கும் நாள் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தால் வெற்றி கிடைக்கும். சந்தேக உணர்வுகள் உங்கள் உறவில் நல்லிணக்கத்தை பாதிக்கும். இன்று வரவை விட செலவு அதிகமாக காணப்படும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருக்கும், பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.அதிக பணிச்சுவை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். உங்கள் துணையுடன் இன்று வெளிப்படையாக பேச மாட்டீர்கள். இன்று மருத்துவ செலவு செய்ய நேரலாம். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:

நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உங்களுக்கு தரப்பட்ட வேலைகளை அனுபவித்து செய்வீர்கள். உங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை பற்றி உங்கள் துணையுடன் கலந்து யோசிப்பீர்கள். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும் ,ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

மீனம்:

இன்று உங்களுக்கு அசவுரியங்கள் ஏற்படலாம். பணிச்சுமை அதிகமாக இருக்கும். முக்கியமான விஷயங்களை உங்கள் துணையுடன் பேச வேண்டும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

4 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

9 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago