மேஷம்:
இன்று நீங்கள் தொடர் முயற்சி எடுக்க வேண்டும் . உங்கள் செயல்களை நம்பிக்கைடன் ஆற்றுங்கள். பதட்டம் வரும் எனவே அதனை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். செலவு அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு வலி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
ரிஷபம்:
இன்று நீங்கள் வெற்றியை காண்பதற்கு மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். கண்டிப்பாக ஒரு செயலை செய்வதற்கு முன் உறுதி இருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். வேலை செய்யும் இடத்தில் பதட்டமாக இருப்பீர்கள். இன்று பணத்தை பொருத்தவரை உங்களிடம் குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தோள் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்:
இன்று உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் கண்டிப்பாக உங்களுக்கு வளர்ச்சி நிச்சயமாக இருக்கும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை நீங்கள் இன்று உற்சாகமாக இருப்பதால் உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இருக்காது.
கடகம்:
இன்று நீங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருப்பது சந்தேகம் தான் . வேலை செய்யும் இடத்தில் விறுவிறுப்பாக இருப்பீர்கள். பணவரவு மிகவும் குறைந்து காணப்படும் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி இருமல் போன்ற பாதிப்பு இருக்கும்.
சிம்மம்:
இன்று நீங்கள் பிரார்த்தனைகள் மூலம் ஆறுதலை பெறலாம் . வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணி சுமை அதிகமாக இருக்கும். பணியின் போது கவனம் சிதறாமல் தெளிவுடன் செயல்படுங்கள். பணவரவு பொருத்தவரை இன்று அதிகமாக செலவு காணப்படலாம். எனவே பார்த்து கவனத்துடன் கையாளுங்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை சூடு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
கன்னி:
இன்று நீங்கள் கண்டிப்பாக பொறுமை வளர்த்து கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சில தவறுகள் நேரலாம். பண வரவிற்கு இது உகந்த நாள் அல்ல . உணவை சரியான நேரத்தில் உண்ண வேண்டும் இல்லையென்றால் நன்றாக தண்ணீரை கூடியுங்கள்.
துலாம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். திட்டமிட்ட செயல்களை நீங்கள் எளிதாக முடிக்கலாம் . வேலை செய்யும் இடத்தில் உங்களது பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நிதிநிலை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் . ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள் . வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஊழியர்கள் உதவி செய்வார்கள். பணம் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை நம்பிக்கையான உணர்வுகள் காணப்படும்.
தனுசு:
இன்று நீங்கள் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமைகள் ஏற்படலாம். பணவரவு குறையும் செலவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம்.
மகரம்:
இன்று நீங்கள் என்ன நினைத்தீர்களோ அது நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை திட்டமிட்டு நேரத்தில் முடிக்க முடியாது. செலவுகள் அதிகமாக காணப்படும் . எனவே பணத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள் . ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி காணப்படும்.
கும்பம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இன்று இருக்காது.
மீனம் :
இன்று உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் . வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை காட்ட வாய்ப்புகள் வழங்கப்படும் . பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…