மேஷ ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும் ஒரு நாள். மேலும் கடைதிறப்பு, கட்டிடத்திறப்பு போன்ற விழாவிற்கான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் அகலும். நண்பர்கள் நண்பகலுக்கு மேல் ஒரு நல்ல தகவலைத் தருவர்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று ராகு கேதுக்களை வழிபட்டு முலம் தங்களுக்கு யோகங்களை வரவழைத்துக் கொள்ளவேண்டிய நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு இன்று செயல்படுவீர்கள். இடமாற்றம் மற்றும் வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும்.
இன்று உங்களின் இல்லம் தேடி ஒரு இனிய செய்தி வந்து சேரும் நாள். நீண்டதூரப் பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
இன்று அரசு வழியில் எடுத்த முயற்சியால் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும் மற்றும் உங்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் எல்லாம் உங்களைத்தேடி வந்து பாராட்டுவர். இன்று தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று உங்களின் வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் தடைப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் வந்து சேரும். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழுமூச்சுடன் இன்று பாடுபடுவீர்கள். சொத்துக்கள் விற்பனையால் கணிசமான தொகை உங்கள் கைக்கு கிடைக்கும்.
இன்று உங்களின் தந்தை வழியில் ஆதரவு கிடைத்து மகிழும்நாள். தனவரவு திருப்திதரும். மேலும் கட்டிடம் கட்டும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தசலுகை இன்று கிடைக்கும். உங்களிடம் உள்ளன்போடு பழகியவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
துலாம் ராசிக்காரர்கள் :
இன்று உங்களுக்கு விழிப்புணர்ச்சி தேவைப்படும் ஒரு நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் அனைத்தும் மீண்டும்உங்களிடமே வந்து சேரும். சில பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. மனதில் இனம்புரியாத கவலை தோன்றும்.
விருச்சக ராசிக்காரர்கள் இன்று ஆலய வழிபாட்டை மேற்கொண்டு ஆனந்தம் காண வேண்டிய நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். பிரபலஸ்தர்களின் சந்திப்பு இன்று கிடைக்கும். பயணங்களால் இன்று பலன் உண்டு. சுபகாரியப்பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு ராசிக்காரர்கள்:
இன்று உங்களின் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் ஒரு நாள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை இன்று உருவாகும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
மகர ராசிக்காரர்கள்:
இன்று நீங்கள் கோவில் வழிபாட்டின் மூலம் குதூகலம் காண வேண்டிய ஒரு நாள். வருமானம் திருப்தி தரும் மற்றும் தாய்வழியில் உதவி கிடைக்கும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை ஆனது மேலோங்கும். பதவியில் உள்ளவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர்.
கும்ப ராசிக்காரர்கள்:
இன்று உங்களைத் தேடி வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இன்று கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு திருப்தி தரும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் எல்லாம் அகலும். பாகப் பிரிவினைகள் எல்லாம் சுமுகமாக முடியும்.
மீன ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு தொட்டது துலங்கும் ஒரு நாள். யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட இன்று வெற்றி பெறுவீர்கள். விவாகப் பேச்சுகள்கள் எல்லாம் முடியும். சகோதரத்தால் இன்று அனுகூலம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் எல்லாம் இன்று விலகுவர்.