இன்று (ஏப்ரல் 9-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு?

Default Image

இன்று  (ஏப்ரல் 9-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாள் உங்களுக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும் நாள் ஆகும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்றைய நாள் உங்களுக்கு  மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும் நாள் ஆகும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்றைய நாள் உங்களுக்கு வரவிற்கேற்ற செலவுகள் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும் நாள் ஆகும்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்றைய நாளில்  உங்களுக்கு எநினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும் நாள் ஆகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்றைய நாளில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் நாள் ஆகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்றைய நாளில் உங்களுக்கு பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். புதிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். சேமிப்பு குறையும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்றைய நாள் உங்களுக்கு  ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டிய நாள் ஆகும்.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்றைய நாளில் உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நாள் ஆகும்.

தனுசு ராசிக்காரர்கள்:

Image result for தனுஷ் ராசி

இன்று உங்களுக்கு எந்த செயலிலும் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும்.  வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும் நாள் ஆகும்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். எளிதில் முடியும் காரியம் கூட தாமதமாக முடியும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும் நாள் ஆகும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Image result for கும்பம் ராசி

இன்றைய நாள் உங்களுக்கு  பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை மாற சற்று கூடுதல் முயற்சி தேவை. சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும் நாள் ஆகும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளிமாநில நண்பர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi