இன்று (ஏப்ரல் 21) 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு?

Default Image

இன்று  (ஏப்ரல் 21-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு  ராசிக்கு பகல் 11.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபார ரீதியான பிரச்சினைகளில் சற்று அமைதி காப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும்  நாள் ஆகும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்றைய நாள் உங்களுக்கு  புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும் நாள் ஆகும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்  நாள் ஆகும்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்றைய நாளில் பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும் நாள் ஆகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்றைய நாளில் பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். சுப முயற்சிகளில் சிறு தடைகள் உருவாகலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும் நாள் ஆகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்றைய நாளில் உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள் நாள் ஆகும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள் ஆகும்.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்றைய நாளில்  நீங்கள் இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக அமைந்து சந்தோஷம் அதிகரிக்கும் நாள்  ஆகும்.

தனுசு ராசிக்காரர்கள்:

Image result for தனுஷ் ராசி

இன்று உங்களுக்கு  எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும் நாள் ஆகும்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும் நாள் ஆகும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Image result for கும்பம் ராசி

இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வீட்டில் பெண்களின் பணிசுமை குறையும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி தேவைகள் நிறைவேறும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு ராசிக்கு பகல் 11.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும்  நாள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School