இன்று (ஏப்ரல் 19) 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு?

Published by
Venu

இன்று  (ஏப்ரல் 19-ஆம் தேதி ) ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாளில் உங்களுக்கு  அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் நாள் ஆகும்.

ரிஷப ராசிக்காரர்கள்: 

இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும் நாள் ஆகும்.

மிதுன ராசிக்காரர்கள்:

 

இன்றைய நாள் உங்களுக்கு  எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும் நாள் ஆகும்.

கடக ராசிக்காரர்கள்:

இன்றைய நாளில் குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும் நாள் ஆகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

இன்றைய நாளில்  சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும் நாள் ஆகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

இன்றைய நாளில் உங்களுக்கு  குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சற்று குறையும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும் நாள் ஆகும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்றைய நாள் உங்களுக்கு எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வங்கி சேமிப்பு உயரும் நாள் ஆகும்.

 

இன்றைய நாளில் உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வருமானம் பெருகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் நாள்  ஆகும்.

தனுசு ராசிக்காரர்கள்:

இன்று உங்களுக்கு   பணவரவு தாரளமாக கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும் நாள் ஆகும்.

மகர ராசிக்காரர்கள்:

இன்றைய நாளில் உங்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பணிச்சுமை குறையும் நாள் ஆகும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் ஓரளவு குறையும்.

மீன ராசிக்காரர்கள்:

இன்றைய நாளில் உங்களுக்கு செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை நாள் ஆகும்.

Recent Posts

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

14 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

54 minutes ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

1 hour ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

10 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

10 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

12 hours ago