இன்றைய (11.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்: நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுதல் தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்களை திட்டமிட்டு ஆற்றுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.

ரிஷபம்: இன்று நம்பிக்கையான போக்கு காணப்படும். இதனால் எளிதில் வெற்றியை அடையலாம். பயனுள்ள முடிவுகள் எடுப்பது உங்களுக்கு இன்று மிகவும் நல்லது. பணியிடத்தில் வளர்ச்சி காணப்படுகின்றது.

மிதுனம்: தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். சிறந்த திட்டமிடல் வேண்டும். உறுதியை வெளிபடுத்த வேண்டும். நீங்கள் செய்யும் பணியில் தொழில் சார்ந்த அணுகுமுறை வேண்டும்.

கடகம் : இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கிடைக்கும். உங்களுக்கு எதாவது இழந்தது போன்ற உணர்வு காணப்படும். உங்கள் பணிகளை மேம்படுத்த பயனுள்ள திட்டங்களை தீட்ட வேண்டும்.

சிம்மம்: தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உங்கள் செயல்களை ஆற்றுவதில் சில தடைகள் காணப்படும். இன்றைய நாளை கவனமுடன் திட்டமிட வேண்டும்.

கன்னி: இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்கை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியமான முடிவுகள் இன்று எடுக்கலாம். இன்று உங்கள் பணிக்கான சிறந்த பலன்களைக் காண்பீர்கள்.

துலாம்: இன்று உங்கள் விருப்பங்கள் மேம்படும் நாள். சுமகமான பலன்கள் கிடைக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். பயணங்களுக்கான வாய்ப்பு உள்ளது. பணியைப் பொறுத்த வரை இன்று உற்சாகமான நாள்.

விருச்சிகம்: இறை வழிபாடு, ஸ்லோகம் மந்திரம் இவற்றின் மூலம் இன்று ஆறுதல் மற்றும் திருப்தி பெறலாம். இன்று உங்கள் செயல்கள் சிறப்பாக இருக்க அவற்றை திட்டமிடுங்கள். இன்று பணிகளை முறையாக திட்டமிட்டுஆற்றுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.

தனுசு: உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல. முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க கூடாது அல்லது தள்ளிப்போட வேண்டும். நேர்மறையான எண்ணங்களைப் பராமரிப்பதன் மூலம் நீங்கள் விரும்பியபடி செயலாற்றலாம்.

மகரம்: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான முடிவுகள் இன்று பலனளிக்கும். இன்று நீங்கள் பிரகாசிப்பீர்கள். உங்கள் பணியில் மிகுந்த திருப்தி காணப்படும்.

கும்பம்: உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் செயல்களில் வெற்றி பெறலாம். உங்கள் பொறுப்புகளை திறமையாக செய்வதே உங்களின் இன்றைய குறிக்கோளாக இருக்கும்.

மீனம்: நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். கவனமுடன் செயலாற்ற வேண்டும். தைரியமாகவும் துணிவாகவும் இருக்க முயல வேண்டும். பணிச்சுமை காரணமாக உங்கள் மேலதிகாரிகள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களுடன் சில விரும்பத்தாகத தருணங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest