இன்றைய (09.5.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: உற்சாகமான ஆற்றலான போக்கை மேற்கொள்வதன் மூலம் நன்மை விளையும். பலனை எதிர்பார்காமல் உங்கள் கடமைகளை செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் போக்கில் நம்பிக்கை காணப்படும். பணியிடத்தில் எடுக்கும் சிறிய முயற்சி கூட பெரிய வெற்றியை பெற்றுத் தரும். உங்கள் பணிகளை மேற்கொள்வதற்கான ஆற்றல் உங்களிடம் காணப்படும்

மிதுனம்: இன்று சிறப்பான நாள் பயனுள்ள முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நல்ல பலன் அளிக்கும். உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் : சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும். பொதுவான நலனுக்கென நீங்கள் சில தரத்தை பராமரிக்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.

சிம்மம்: இன்று நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும். எனவே நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் காணப்படும்.

கன்னி: இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பொது நிகழ்ச்சிகளின் பங்கேற்பு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணிகளைக் கையாளும் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

துலாம்: இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள். எனவே பெரிய அளவில் யோசித்து எந்த வாய்ப்பு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.பணியிடத்தில் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

விருச்சிகம்: இன்று பலன்கள் கலந்து காணப்படும். நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இன்று சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும்.இன்று பணியில் திருப்தி காணப்படாது.

தனுசு:இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள்.அதிகப் பொறுப்புகள் காரணமாக உங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும்.

மகரம்: இன்று நீங்கள் உங்கள் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு திறமைக்கான பாராட்டு பெறுவீர்கள். நீங்கள் திறமையாக பணியாற்றுவீர்கள்.

கும்பம்: உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மீனம்: உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருங்கள். உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அனைத்து செயல்களையும் கவனமாக திட்டமிட்டு,முடிவெடுத்து மேற்கொள்வது சிறந்தது.

Published by
பால முருகன்

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

1 hour ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

3 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

4 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

5 hours ago